பக்கம்:Saiva Nanneri.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I?5 காட்டை ஆண்டு தோறும் நடத்தி வருகிருர். புலவர்க்குப் பொன்னும் பொருளும் வரையாது வழங்கி வருகிரு.ர். விநாயகரைப் பற்றி இவர் காலத்தில் வெளியிடப்பட்ட நூல் கண்ணேயும் கருத்தையும் கவரும் சிறந்ததொரு நூலாகும். அவ்வக்காலத்தில் விளங்கிய தமிழ்ப் புலவர் கள் திருவாவடுதுறை ஆதீனத்தில் தொடர்பு பெற்றுத் தங்கள் புலமை வளர்ச்சிக்கு ஆதரவு பெற்றனர். தமிழ்ப் பேரறிஞர்களாகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ. வே. சாமிநாத ஐயர், ஆறுமுக காவலர், கச்சியப்ப முனிவர் முதலியோர் இவ்வாதினப் புலவர்களாய் விளங்கினர். இன்றும் பலர் உள்ளனர். - தஞ்சையில் மாயவரத்துக்கருகிலுள்ள தருமபுரம் என்னும் ஊரிள்ள மடத்தை நிறுவியவர் குருஞான சம்பந்த தேசிகர். ஆடுதுறையார் சிவஞான போதத்தைச் சிறப்பாகக் கொள்வது போலத் தருமையாதீனத்தார் சிவ ஞான சித்தியை மேற்கொள்வர், முத்தி நிச்சய பாடியம் என்ற நூல் சிறப்பாகக் கருதப்படும். சிவஞான போகத் துக்குச் சிற்றுரை, பேருரை தோன்றியது போல முத்தி நிச்சயம் என்ற நாற்குச் சிற்றுரையும் பேருரை யும் உண்டு. இந்நூல் சைவசித்தாந்தக் கருத்துக்களே அழகுற எடுத்துக்கூறும். இதன் ஆசிரியர் ஞானசம்பந்த தேசிகர் கி. பி. 16-ஆம் நூற்ருண்டைச் சேர்ந்தவர். தர்மபுரப் பண்டாரச் சாத்திரங்களுட் தலை சிறந்தது சிவபோக சாரம்' என்னும் நூலாகும். இது எளிமை யும் இனிமையும் வாய்ந்ததாகும். நான்காவது பட்டத் திலிருந்த மாசிலாமணி தேசிகர் காலத்தில் குமரகுருபரர் அவர்டால் ஞான திட்சை பெற்ருர். இம்மடத்தின் ஆருவது பட்டம் திருஞானசம்பந்த தேசிகர் சமூக மாலே, முத்தி நிச்சயப் பேருரை, சிவஞான சித்திக்கு ஞான வர்ண விருத்தியுரை ஆகிய நூல்களை எழுதினர். கந்தபுராணச் சுருக்கம் எழுதியவரும் தருமபுரப் பண்டாரச் சங்கிதியாகப் பின்னர் விளங்கியவருமாகிய சம்பந்த சரணுலயரும் சிவப் பிரகாசரின் ஆசிரியராகிய வெள்ளியம்பலத் தம்பிரானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/180&oldid=729932" இலிருந்து மீள்விக்கப்பட்டது