பக்கம்:Saiva Nanneri.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O ருண்டு. காஞ்சியில் வாழ்ந்த குமாரசுவாமிப் பண்டாரமே இவரது தங்தையார். வடமொழி தென்மொழிகளில் வல்ல வரான இவர் வீர சைவ மரபினர். பெரும் புலவராகிய இவ ரைக் 'கற்பனைக் களஞ்சியம்' என 5ாம் இன்றும் புகழ் கின்ருேம். கருணைப் பிரகாசரும் வேலேய சுவாமிகளும் இவரது உடன்பிறந்தோராவார். இம்மூவரும் சேர்ந்தே சீகாளத்தி புராணத்தைப் பாடிமுடித்தனர். இவ்விர சைவ மடத்தின் இப்பொழுதுள்ள தலைவர் பாலேய சுவாமி கள், திருமயிலத்தில் ஒரு முருகன் கோயிலையும், தமிழ்க் கல்லூரி ஒன்றினையும் ஏற்படுத்தி உள்ளார். சிவப்பிரகாச ரது பிரபந்தங்களே ஒன்று சேர்த்து வெளியிடச் செய்துள் ளார். பிரபுலிங்கலீலேக்கு (ஒரு பகுதி) உரை தி வெளியிடச் செய்துள்ளார். கோவைக்கருகிலுள்ஹ பேரூர் மடமாகிய சாந்தலிங்க சுவாமிகள் மடமும் _iரசைவ மடமே. சாந்தலிங்க சுவாமிகளின் மாணவரே, திருப் போரூரில் தங்கி மடமொன்று கிறுவியவரும் திருப்போரூர் சங்கி தி முறை என்னும் சுவைமிகுந்த நூலேப் பாடியவரு மாகிய சிதம்பரசுவாமிகள். தற்பொழுது தமிழ்க்கல்லுரரி ஒன்று பேரூர் மடத்தால் கடத்தப்படுகிறது. வைராக்கிய சதகம், அவிரோத உக்தியார், கொலை மறுத்தல் முதலியன சாந்தலிங்க சுவாமிகள் இயற்றிய நால்களாகும். இவரது காலம் கி. பி. 17-ஆம் நாற்ருண்டாகும். இம்மடங்கள் தவிர வேதாந்த மடங்கள் பலவும் தமிழ் நாட்டில் உள்ளன. స్గో. * == _ **** ----- . ா - --- * = ينة -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/185&oldid=729937" இலிருந்து மீள்விக்கப்பட்டது