பக்கம்:Saiva Nanneri.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 இமிழிசை அருவியோடு இன்னியம் கறங்க உருவப்பல் பூத்து உய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முறுகாற்றுப் படுக்கிருள். அதன் பின்னர் முருக வழிபாடு நடைபெறுகிறது: வாழ்த் தொலி கேட்கிறது. 'ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடு வாய்வைத்துக் கொடுமணி இயக்கி . ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த வாறே'. அடுத்து முருகனே எப்படி வழிபட வேண்டும் என்பது கூறப்படுகின்றது. - -- "முந்து நீ கண்டுழிமுகன் அமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெறுஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர். பயந்த ஆறமர் செல்வ போர்மிகு பொருந! குரிசில்! எனப்பல யானறி அளவையின் ஏத்தி’, - தனது இயலாமையைப் புலப்படுத்தி,வந்த செயலே உணர்த் தல் வேண்டும். - இவ்வாறு நூல். முழுவதும் முருகனுக்குப் பல்வேறு இடங்களிலும் செய்யப்படும் பல திறப்பட்ட வழிபாடு களைப் பற்றியும், அவ்வழிபாட்டிடை முருகன் பொலிந்து தோன்றும் திருக்காட்சியினைப் பற்றியும், நாம் எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/32&oldid=729954" இலிருந்து மீள்விக்கப்பட்டது