பக்கம்:Saiva Nanneri.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பல்லவர் காலத்திற்கு முந்திய சைவம் கரப்.பிய காலம் பல்லவர் காலம் கி. பி. மூன்ரும் நாற்ருண்டிலிருந்து தொடங்குகிறது என்பது டாக்டர் கோபாலன் அவர்கள் கருத்து. ஆனால் பேராசிரியர் சராசடிகள் பல்லவர் காலம் கி. பி. நான்காம் நூற்ருண்டின் இடையே தொடங்கு கிறது என்று கூறியுள்ளார். என்ருலும் டாக்டர் கோபா லன் அவர்களின் கருத்தே பொதுவாகப் பெரும்பாலும் ஏற் றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பல்லவர் தம் திருங் திய, தெளிந்த ஆட்சி கி. பி. ஏழாம் நூற்ருண்டுக்குப்பின் தான் வலுப்பெற்றது என்று சொல்ல வேண்டும். சிவச் கந்தவர்மல்ை தொடங்கப்பெற்ற பல்லலர் ஆட்சி ஏறத் தாமு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னரே விளக்கம் பெற் றது. தமிழ் வரலாற்றின் பொற்காலமாகிய சங்க காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டோடு முடிவுற்றது என்று கூற வேண்டும். இச்சங்க காலத்தை ஒட்டியதுதான் காப் பிய காலம், இக்காலத்தில்தான் நெஞ்சை அள்ளும் சிலப் பதிகாரமும், மனத்திற்கு மகிழ்வூட்டும் மணிமேகலையும் முறையே இளங்கோவாலும் சாத்தனராலும் இயற்றப் பட்டன. சங்க காலத்தை அடுத்த காப்பிய காலத்தில் விளங்கிய சைவத்தின் கிலேயை நமக்கு விளக்கிக்காட்டும் ஒளிப்படங்களாக இவ்விரட்டைக் காப்பியங்கள் கின்று ஒளிர் கின்றன. பல்லவர் காலத்துக்கு முற்பட்ட தமிழ் ாாட்டில் நிலவிய சைவ சமயத்தைப்பற்றி ஆராய்வதற்கு இவ்விரட்டைக் காப்பியங்களேத் தவிர வேறு ஏற்ற கல் வட்டுக்களோ, பட்டயச் சான்றுகளோ, புதை பொருட் சான்றுகளோ கிடைத்தில. இக்காப்பிய காலத்தில் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/39&oldid=729961" இலிருந்து மீள்விக்கப்பட்டது