பக்கம்:Saiva Nanneri.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4() கோள்கெறி, ஆயுள் வகை, மருத்துவமுறை, பொருட் கலவை, மூச்சொழுங்கு, மன ஒருமை, காடி நலம், அறி வொளி, ஒலி இயக்கம், உணர்வு மாட்சி, அருள் வீறு முத லிய நல்வாழ்க்கைக் குறிப்புக்கள் நுட்ப திட்பமான விளக் கம் பெறுகின்றன. நூலுணர்ச்சியால் அறிந்து கொள்ள இயலாத நுண்ணிய உண்மைகளையும் திருமூலர் தம் தவ யோக ஞான கிலேகளாற் கண்டு விளக்கியிருக்கின்ருர். "நல்லவர் வாழ நல்லுணர்வுகள் பரவும்; அவை நுண் பொருள்களே இயக்கும்; அதனல் மழை பொழியும், அறம் ஒங்கும்; மீறக் தேயும்; அருள் பெருகும்; உலகத்துயர் திரும்” என்று பாயிரம் கூறுகிறது. நூலின் ஒன்பது தங் திரங்களும் முறையே நல்லொழுக்கம், அறவாழ்க்கை, யோகப் பழக்கம், மந்திர நுட்பம், சமய ஒழுக்கம், குரு நெறி கிற்றல், அகப்புற உணர்வு, அருள் நுகர்வு, பெரு வாழ்வு எனும் பொருள்களே விளக்குகின்றன. முப் பொருள், மூவகை உயிர்கள், மும்மலம், முப்பத்தன்று தத் துவங்கள், கால்வகை நெறிகள், திருறுே, இருள் வீழ்ச்சி, திருவைந்தெழுத்து, திருக்கூத்து முதலிய சித்தாந்தச் சமய கெறிகளும், முறைகளும், குறியீடுகளும் நூல் முழுவதும் வருகின்றன. மேலும் எங்கும் யோகப் பயிற்சியைச் சிறப் புறக் கூறுகின்ருர். 'அன்பே சிவம்” என்பது தான் திருமங் திரத்தின் உள்ளொளி. சிவ கிலே என்னும் தாய உணர்வு கிலே என்பது அவா என்னும் அழுக்கு நீங்கிய கிலேயாகும். அவாவினே அறுப்பது அன்புணர்வே. இது போன்ற காலங் கடந்து கிற்கும் கோட்பாடுகள் எத்தனையோ பல இம்மந்திர நூலிலே புதையுண்டு கிடக்கின்றன. --- --- -- - -- திருமூலருக்கு முன் தமிழ் நாட்டில் தமிழில் சைவசித் தாந்த நூல் இல்லை. எனவே அவர் செய்த திருமந்திரமே. சைவசித்தாந்த முதல் நூல் என்பது தெளிவு. ஆதலின் இந்நூல், பின்வந்த அப்பர், சுந்தரர் முதலிய சைவ அடியார் கட்கும், அவர்களால் பரப்பப்பட்ட சைவ சமயத்திற்கும். ஆதார நூலாயிற்று. திருமூலர் தமது திருமந்திரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/47&oldid=729970" இலிருந்து மீள்விக்கப்பட்டது