பக்கம்:Saiva Nanneri.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பல்லவர் காலச் சைவம் சமய ப் புரட்சி கி. பி. 600 முதல் 900 வரை பல்லவர் சிறக்க வாழ்ந்த காலமாகும். இக்காலத்தில் தமிழகம் பல வகையிம் ம்ெ தோங்கி விளங்கியது. தமிழக வரலாற்றினைத் திட் வட்டமாகத் தெரிந்துகொள்வதற்குப் பெரிதும் கவும் செப்பேடுகள், கல்வெட்டுக்கள், கலைக்கோயில்கள். இவக் கியங்கள் ஆகியன இக்காலத்தில் உருவாயின. தமி|ர் நாட்டு வரலாற்றையும் வாழ்க்கை நெறியினேயும் பல்லவர் காலத்து எழுந்த இலக்கியங்கள் என்றென்றும் கமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மேலும் பல்லவர்களால் (புப் பப்பட்ட கற்கோயில்களும், கல் மண்டபங்களும். எழுதப் பெற்ற ஒவியங்களும், செதுக்கப்பட்ட சிற்பங்களும் இன் றும் நின்று அவர்தம் புகழ் பரப்பிக் கொண்டிருக் கின்றன. பல்லவர் காலத்தில் தோன்றிய பல்வேறு ". களும், இலக்கியங்களும், சமயக் கோட்பாடுகளும், இன் n ளவும் நம்மோடு பிணைந்தே காணப்படுகின்றன. கலேயை யும் கல்வியையும் போற்றி வளர்த்த பல்லவப் பெருவேங் தர்கள் சைவத்தையும் வைணவத்தையும் வீறுபெற்றெ/க் செய்தனர். இவ்விரு சமயங்களோடு புத்தமும் சமன மும் இக்காலத்தில் தமிழகத்தில் நன்கு வாழ்ந்தன. என்றே சொல்லவேண்டும். ஒரிரு மன்னர்கள் தவிர ஏனையோர் அவைகளுக்கும் ஆக்கம் அளித்து வந்தார்கள். கருங்கள் பாறைகளைக் குடைந்து கோயிலாக்கியும், பின் அவற்றைப் பிளந்தெடுத்துக் கோயில் கட்டியும் சமயத்தோடு கலேயை யும் பிறவற்றையும் வளர்த்த பெருமை பல்லவர்க்கே உரி யது. இக்காலத்தில்தான் சைவம் வெகு விரைவாக வளர லாயிற்று. மூவர் தமது திருப்பாக்களால் டெங்கும் சைவப் பேரொளி பரவுமாறு செய்தனர். அப்பர் சைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/52&oldid=729976" இலிருந்து மீள்விக்கப்பட்டது