பக்கம்:Saiva Nanneri.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

・ 5 I மூன்ரும் நந்திவர்மன் (கி. பி. 825-850) காலத்தில் தான் சைவ மறுமலர்ச்சி கிளர்ந்து எழுந்தது. அவன் சிறந்த சிவபக்தனுக விளங்கியமையால் அவன் பல சிவன் கோயில்களில் அறங்கள் செய்துள்ளான். அவன் காலத்த வரே சுந்தரர். சுந்தரர் பல தலங்களுக்கும் சென்று திருப் பதிகங்கள் பாடிச் சைவத்தை வளர்த்தார். அவர் காலத் தில் சைவத்திற்கும் பிற சமயங்களுக்கும் பூசலில்லை. எனவே அவர் காலத்தில் சைவம் தடையின்றித் தழைத் தோங்கியது. கோட் புலி நாயனர், கலிக்காம நாயனர், விறல் மிண்ட நாயனர் முதலிய காயன்மார்கள் பலரும் இக்காலத்தில் வாழ்ந்து சைவத் திருப்பணிகளைப் பெரு விருப்புடன் செய்தனர். இதுவரை கூறியவாற்ருல், கலைக் கோயிலாகவும், கல்விக் கூடமாகவும் தமிழகத்தைத் திகழச் செய்த பல்ல வப் பெருவேந்தர்கள் சைவ வைணவ சமயங்களைத் தங்கள் இரு கண்களாகக் கருதிக் காத்தோம்பினர் என்பதும், கோயில்கள் அமைப்பை முதன் முதலில் உருவாக்கியவர் கள் அவர்களே என்பதும் எளிதிற் பெறப்படும். - பல்லவர் காலத்துக் கோயில்கள் பல்லவ மன்னர்கள் பழைய கோயில்களைப் புதுப்பித் தனர். புதிய கோயில்களைக் கட்டினர். செங்கற்கோயில் கள் எல்லாம் கருங்கற் கோயில்களாக மாறின. மொட்ட்ை மலைகள் எல்லாம் கோவில்களாக மாற்றப்பட்டன. மலேக எளின் சரிவுகளிலே குடைவரைக் கோயில்கள் குடையப் பட்டன. மலைகள் கற்களாக உடைக்கப்பட்டு, அடுக்கப் பட்டுக் கோயில்களாகக் கட்டப்பட்டன. பல்லவர் காலத் தில் சில கோயில்களே புதியனவாகக் கட்டப்பட்டன. அவற்றுள் பல்லவன் ஈசுவரம், மயேந்திரப் பள்ளி என்ற இரண்டுமே நாயன்மாரால் பாடப் பெற்றன. பல்லவர்க்கு முன்பே பல கோயில்கள் தமிழகத்தில் இருந்தன என் ப்தை, கி. பி. 700-இல் திருங்ாவுக்கரசரும் சம்பந்தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/58&oldid=729982" இலிருந்து மீள்விக்கப்பட்டது