பக்கம்:Saiva Nanneri.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 என்பதும் சைவர் அனைவரும் ஓரினத்தவரே என்ற மன நிலையிற் பழகி வந்தனர் என்பதும் நன்கு தெரியலாகும். சைவ அடியார்கள் எவருக்கும் அஞ்சாதவர்கள்; சம யப் பற்று மிகுந்தவர்கள்; சமயத்திற்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் துணிந்தவர்கள். சிவனெறிக்கு மாறுபட்ட செயலினே அரசே செயினும் தண்டிக்கும் ஆண்மை மிக்கவர். குது முதலிய விலக்கப்பட்ட துறைக ளிற் பொருளிட்டியேனும் சைவத்தை வளர்த்தனர். இவ் வுண்மைகளே முறையே இயற்பகை நாயனுர், கழற்சிங்க நாயனுர், மூர்க்க நாயனர் ஆகியோரது வரலாறுகளிலே நாம் காணலாம். சிவத் திருப்பணிகள் செய்வதற்குரிய மாணவர்களையும் நாயன்மார்கள் உருவாக்கினர். அவர்தம் மனேவியரும் தம் கணவருடன் சேர்ந்து சமய வளர்ச்சிக் காகப் பெரிதும் பாடுபட்டனர். அறுபத்து மூன்று நாயன் மார்களிலே கலமையும் சிறப்பும் வாய்ந்தவர்கள். மூவர் என்று நாம் போற்றி வணங்கும் ஞான சம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோராவர். இம் மூவருடன் மணிவாசகரையும் சேர்த்து நால்வர் எனக் கூறி காம் அவர் களே நாவாறப் புகழ்கின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/63&oldid=729988" இலிருந்து மீள்விக்கப்பட்டது