பக்கம்:Saiva Nanneri.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இயச் சான்று (Literary evidence), கல்வெட்டுச் சான்று (Epigraphic Evidence) முதலிய சான்றுகளைக்கொண்டு ஆராய்ந்து எல்லோராலும் ஒப்புக்கொண்டு பாராட்டும் அளவுக்குச் சம்பந்தர் காலத்தைக் கணித்து முடிபு கூறிய பெருமை பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களேயே சாரும். பேராசியர் பிள்ளையவர்கள் முடிபுக்குப் பெருந்துணை புரிந்தது சிறுத்தொண்டர் பல்லவர்க்காக வாதாபி சென்று சாளுக்கியனே வென்றமை பற்றிப் பெரியபுராணத்தில் வரும் செய்யுள் ஒன்முகும். அச்செய்யுள் பின் வருமாறு:

மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்

தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மனியும் கிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னன எண்ணில கவர்ந்தே யிகலரசன் முன்கொணர்ந்தார்: இச்செய்யுளில் கூறப்பட்ட படையெடுப்பு மகேந்திரவர்ம பல்லவன் மகனை நரசிம்மவர்மப் பல்லவன் காலத்திலே தளபதி பரஞ்சோதியார் தலைமையின் கீழ் கடந்ததாகும் என்பதை முதன் முதற் கண்டு கூறியவர் திரு. வெங்கையா என்பவராவார். அதனை அவர் சென்னைக் கிறித்தவக் கல்லுரரி மலரில் வெளியிட்டுள்ளார். நரசிம்மவர்மல்ை தோற்கடிக்கப்பட்டவன் மேலேச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியாவான். இவல்ை தோற்கடிக்கப் பட்டவன் ஹர்ஷ மன்னன்.நரசிம்மன் ஆண்ட காலம் கி. பி. 680-668 என்பதாகும். எனவே அவனுக்குத் தானேத் தலை வராக விளங்கிய பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர் காலமும் அதுவே. அதுவாகவே, அவரைப் பாடிய ஞான சம்பந்தர் காலமும் அதுவே என்னலாம். எனவே சம்பந்: தர் கி. பி. ஏழாம் நூற் ரு ண் டி ன் இடைப்பகுதியில். வாழ்ந்தவர் என்னலாம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/67&oldid=729992" இலிருந்து மீள்விக்கப்பட்டது