பக்கம்:Saiva Nanneri.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சம்பந்தர் பாடல்கள் திருஞான சம்பந்தர் தமிழிசைக்கும் இறைவன் புக ழுக்குமே தம் திருப்பாட்டுக்களில் முதலிடம் தந்த போதி லும் அங்கங்கே அறிஞர் தம் நுண்மாண் நுழைபுலங் கொண்டு காணத்தக்க அளவில் சைவ சித்தாந்தக் கருத் துக்களே அமைத்துள்ளார். முன்னர்க் கூறியபடி மணி மேகலையில் சைவவாதி கூறிய கொள்கையைத் திருஞான சம்பந்தர் விரித்தும் சுருக்கியும் விளக்கியும் தம் தெய்வ நலங்கொழிக்கும் தேவாரப் பாடல்களிடையே கூறியுள் @T广T。 சுடர் இரண்டு, இயமானன் ஒன்று, பூதம் ஐந்து, ஆக் எட்டு வடிவாக இறைவன் உளன் என்ற கொள் மண்னெடு நீர் அனல்காலோடு ஆகாயம் மதியிரவி எண்ணில்வரும் இயமானன் இகபரமும் எண்டிசையும் பெண்ணினெடு ஆண்பெருமையொடு சிறுமையுமாம் பேராளன் : என்று சம்பந்தர் விளக்கியுள்ளார். மேலும் ' துடைக் துத் துயர்தீர் தோற்றத் தோனும்' என்னும் மணிமேகலை வரிக்கருத்தை, 1.இருநிலனதுபுன லிடைமடிதர எரிபுக எரியதுமிகு பெருவளியினில் அவிதர வளிகெட வியனிடை முழுவது கெட இருவர்கள் உடல் பொறை யொடுதிரி எழில்உரு உடையவன்' என்று சம்பந்தர் விளக்குகின்ருர். சைவ சித்தாந்த உரைகள் சுத்தாத்துவித கிலேஎன்ற உடனிலை ஒன்றைக் கூறுகின்றன. உடதைலே உனிலை எனப்படும். ஆதியும் அந்தமும் ஆகிய முதல்வன் உயிர்களிடத்தில் உயிர்க்குயிராய் உடய்ை கின்று, காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/68&oldid=729993" இலிருந்து மீள்விக்கப்பட்டது