பக்கம்:Saiva Nanneri.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வேதவழக்கொடுபட்ட வைதிக சமயமாகும். வேத சம யத்தை எதிர்த்துத் தோன்றிய சமயம் சமணமாகும். வேதத்தைப் புத்தமும் சமணமும் சாங்கியமும் யோக மும் மறுக்கின்றன; அதனை மதிப்பதும் இல்லை. இங்கிலே யில், அமிழ்ந்த சைவம் தனியே கின்று சமணத்தோடும் பிறவற்ருேடும் போரிட்டு வெற்றி பெறல் என்பது இய லாக ஒன்று. எனவே அது சமண மதத்திற்கு எதிரான வைதிக மதத்தினுேடு நட்புக் கொள்ள வேண்டியதாயிற்று. வைதிக சமயம் மக்களிடையே ஒரளவுக்கு நிலவி வந்துள். ளது. அதல்ை சைவம் வைதிகத்தோடு இணைந்தது: சமணத்தை எதிர்த்தது. அக்காலை சைவத்துக்கு உறுதுணை யாகவும் வலிவும் வாழ்வும் தருவதாகவும் உள்ள வேதத் தையே சமணம் தாக்குவதைக் கண்ட சைவ அடியாராகிய சம்பந்தருக்குப் பொறுக்கவில்லை. அதல்ை அவர் சம னரைத் திட்டுகிருர். அவ்வாறு திட்டும்பொழுது சமணர் கள் வேதத்தையும், அது கூறும் வேள்வியையும் இகழ்ப வர்கள் என்று கூறியே பெரும்பாலும் திட்டுகிருர். "வேத வேள்வியை கிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணனெடு தேரரை' - வைதிகத்தின் வழியொழு காதவக் கைதவ முடைக் காரமண் தேரரை' 'மறை வழக்கமிலாதமா பாவிகள்' 'அந்தணுளர் புரியும் அருமுறை சிங்தை செய்யா அருகர் திறங்கள்' 'அழலதோம்பும் அருமறை யோர்திறம் விழலது என்னும் அருகர்.' குரானசம்பந்தரால் ஏற்பட்ட விளைவுகள் ஞானசம்பந்தரின் தோற்றத்தால் தமிழக வரலாற்றி லேயே ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது என்னலாம். அதே மாறுதல் தமிழ் நாட்டு வரலாற்றில் மட்டுமன்று :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/81&oldid=730008" இலிருந்து மீள்விக்கப்பட்டது