பக்கம்:Saiva Nanneri.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 'வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறைவிளங்க பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். 'சிவனடியே சிங் திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனையற மாற்றும் பாங்கினில் ஒங்கிய ஞானம் உவமை யிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ் ஞான ம தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார்: என்று சேக்கிழார் புகழ்கிரு.ர். பின் வந்த தமிழ்ப் புலவர் அனைவரும் தாம் பாடிய நூல்களில் ஞானசம்பந்தர்க்குத் தலைமையிடம் நல்கி வாழ்த்துக் கூறியுள்ளனர். சம்பந்தரைப் பாராட்டி உரைக்கும் தமிழ் நூல்கள் (வெளிவந்தன, வராத்ன) இரு நூற்ற்க்கு மேற்பட்டனவாகும். இவ்வாறு புலவர் உலகம் மட்டுமின்றிப் பொது மக்களும் சம்பந்தரின் திருப்பெரு மையும் தொண்டும் கண்டுணர்ந்து பல வழியாலும் பாராட் டியதைப் பிற்காலக் கல்வெட்டுக்கள் நன்குணர்த்து கின்றன. ஆளுடைய பிள்ளையார், சிவஞானசம்பந்த அடிகள், சம்பந்தப் பெருமான், காழிகாடுடைய பிள்ளை என்பன சம்பந்தர்க்குக் கல்வெட்டு வழங்கிய தொடர்க ளாகும். பின் வந்த தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக் குச் சம்பந்தரின் பெயரையும், அவர் பாடல்களில் பயின்று வரும் அழகொளிரும் அருஞ்சொற்ருெடர்களையும் பெய ராக இட்டு வழங்கியுள்ளனர். "திருஞான சம்பந்தப் பல்லவரையன், திரு ஞானசம்பந்த மாராயன்' என்பவை அரசியல் தலைவர்களின் பெயர்கள்; நம்பி சம்பந்தப் பெரு மாள், நல்ல ஞானசம்பந்தன், செல்வ ஞானசம்பந்தன் என்பன் பொதுமக்களில் ஆடவர் பெயர்கள். ஞான சம்பந்த கங்கை என்பது பெண்டிர் பெயர். கோளறு. திருப்பதிகத்திலும் பிறவற்றிலும் ஆணைநமதே என்ற தொடர் வந்துளது. அதனை ஒருவர் பெயராகக் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/84&oldid=730011" இலிருந்து மீள்விக்கப்பட்டது