பக்கம்:Saiva Nanneri.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S5 வைத்துக் காண்கிருர். உள்ளத்தில் விளங்கும் புந்தி வட் டத்தில் இறைவன் சிவமாய்க் காட்சியளிக்கின்ருன். அக் காட்சி தேனும் இன்னமுதுமாய் அவர்க்கு இன்பம் செய் கின்றது. அவ்வின் பத்தில் மூழ்கித் திளேக்கும் அப்பர் அங்கே காட்சி நல்கும் சிவத்துக்குத் தன் உள்ளம் கோயி லாவதையும், உடல் இடங்கொண்ட தாம் அங்கு ஊறு கின்ற இன்பத்தை நுகர்வதையும், அதனே நுகராதவாறு தடைசெய்து கின்ற வினைத் தொடர்பு ங்ேகி மறைவதை யும், சிவன்பால் பேரன்பு பெருகி மிகுவதையும் உணர் கின்ருர். இத்தனேக்கும் ஏதுவாவது இறைவன் தன்னைக் 'கூழாட்கொண்ட பேரருளே என்று தெளிகின்ருர், அத் தெளிவால் இறைவனை நோக்கி, என்பு இருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு என்னை யோர் உருவமாக்கி இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டுஎன் உள்ளம் கோயி லாக்கி அன்பு இருத்தி அடியேனைக் கூழாட் கொண்டருள் செய்த ஆரூரர் ' என்று பாராட்டியுரைக்கின்ருர். இவ்வாறு அகவழிபாடு சிவபோக உணர்ச்சிக்கு வாயிலாவது கொண்டு, காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே துாய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும் பாலா கிறைய நீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனர்க்குப் போற்றவிக் காட்டினேமே ’’ என்றும், இதனைச் செய்வாரது பாவம் காசமாகும் என் றும் எடுத்துரைத்துள்ளார். அப்பரது இறுதி வேண்டுகோள்: இறைவா! சாகும் நாளில் பொறி, புலன்கள் கிலே கலங்கி அலமருமாதலால், யான் வேறு பற்றுக் கோடின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/90&oldid=730018" இலிருந்து மீள்விக்கப்பட்டது