பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கருங்கல்லால் ஆனது. திருஞானசம்பக்தர் அப்பர் பாடல் பெற்றது. கர்ப்க்கிரகம் சோழக் கட்டிடம் , பிராகாரங்கள் துல்ஜாஜி மஹாராஜாவால் கட்டப்பட்டவை. கீழப்பழுவூர் -உடையார்பாளையம் தாலூகா திருச் சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி, அரியலூருக்குத் தெற்கிலுள்ளது. திருவையாருக்கு 11-மயில் வடகிழக்கு ; இதற்கு ஆலந்துறை என்று மற்ருெரு பெயர் ; சிறு பழுவூர் என்றும் பெயர். சிவாலயம், ஸ்வாமி வடமூலேஸ் வர், தேவி அருந்தவநாயகி ; பழு = ஆல் கொள்ளிட தீர்த்தம், பி ர ம தீ ர் த் த ம். அஷ்ட வீரட்டானங்களில் ஒன்று, யானேயை உரித்துப் போர்த்த ஸ்தலம். பிரம்மோற் சவம் பங்குனி மாசம், திருஞான சம்பந்தர் பாடல்பெற்றது. இங்கு பரசுராமர் பூசித்து மாத்ருஹத்தி நீங்கினர் என்பது ஐதிகம். இதனருகில் மேலைப் பழுவூரில் ஒரு சிவாலயமுண்டு; பல்லவ கட்டிடம். இவ்வூருக்கு கெடும் கழுவூர் என்றும் பெயர் உளது; ஸ்வாமி சுந்தரேஸ்வரர், தேவி மீனாட்சி. கீழுர் -திருக்கோயிலூர் தாலூகா, தென் ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, வீரட்டானேஸ்வரர் கோயில் : ஸ்வாமி பெயர் திருவீரட்டானமுடையார் என்றும், திருக்கு கனிஸ்வரமுடையார் என்றும் கல்வெட்டுகளி லிருக்கிறது. ஊர் பெயர் திருக்கோவனூர் என்றிருக்கிறது. பிரஹங் நாயகி.பெரிய காய்ச்சியார். பழய கோயில் 1907-ம் வருடம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது. கீழக்கடம்பூர் -இதற்கு கடம்பையிளங் கோயில் என் ஆறும் பெயர். சீர்காழிக்கு 10-மயில் சிவாலயம், வைப்பு விதலம். கீழுர் -தென் இந்தியா மலையாள தேசம். சிவாலயம் ஸ்வாமி பாதுகாத்த ஈசர், பார்வதி தேவி. குக்கனூர் :-மத்திய இந்தியா, நிஜாம் ராஜ்யம், இட்டார் சியிலிருந்து 4-மயில் வடக்கு ; சிவாலயம் ; ஸ்வாமி கள்ளேஸ் வார். பெரிய கோயில் 82 x 7.5 கஜம் விஸ்தீரணம் ; இதன் கிழக்கு கோபுரம் 16-ஆம் நூற்றண்டில் கட்டப்பட்டதாக பெர்கூசன் நினைக்கிருச். இதற்குப் பின்புறம் 9 சிறு கோயில்கள் உள, கவலிங்கர்கோயில்; அவைகளில் 9 லிங்கங்கள் இருக்கின்றன. இச் சிறு கோயில்கள் 9ஆம் நூற்ருரண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று பெர்கூசன் 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/28&oldid=730258" இலிருந்து மீள்விக்கப்பட்டது