பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பதுபோலிருக்கிறது; இடது காத்தில் ஒரு காகம்; பின்னிய கே ச க் ைக உடையது; எக்ஞோப்விதம் கிடையாது. கோபிநாத் ராயர் அவர்கள் இதன் காலம் கி. மு. முதல் நூற்றுண்டு என்று நினைக்கிருர், கோயில் விக்ரமசோழ ல்ை கட்டப்பட்டதாம். துப்ரெயில் துரை லிங்கம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்று எண்ணுகிரு.ர். குடிமி யாம லே :-சென்னை ராஜதானி, புதுக்கோட் டைக்கு 12-மயில்; இதற்கு கிகாநல்லூர் என்றும் கிருமலைக் குன்றம் என்றும் பெயர். சிவாலயம் மிகவும் பழமையானது; பல்லவ சி ல் ப ம் ; குகைக்கோயில் மஹேந்திரவர்மல்ை ஏழாம் நூற்ருண்டில் குடையப்பட்டது. இங்குள்ள ஏழு நிலைக் கோபுரம் ஒரு பாண்டிய அரசன் கட்டியது. ஸ்வாமி சிகை நாதர், தேவி அகிலாண்டேஸ்வரி. அம்மன் கோயி லுக் கெதிரில் ஆறு மூலே வடிவுள்ள ஒரு கல்லின்மீது பழய காலத்தில் புதுக்கோட்டை அரசர்களுக்கு பட்டாபிஷேகம் ஆவது வழக்கமாம். கோயிலுக்குத் தெற்கே அர்த்த சித்திரமாக கணேச விக்ரஹம் உளது ; வலம்புரி வினாயகர். இதற்கும் கொயிலுக்கும் இடையில் பல்லவ கிரந்த எழுத் தில் சங்கீதக் கல்வெட்டு ஒன்றுளது. இது ஏழு அல்லது எட்டாம் நூற்றண்டில் வெட்டப்பட்டதென்பர். இங்கு பின் புறத்திலும் ஒரு மலைக்கோயில் உண்டு, இதற்கு மேலேக் கோயில் என்று பெயர்; இதில் சிவலிங்கமிருக்கிறது. கர்ப்பக் கிரஹமும், அர்த்த மண்டபமும் மலையில் செதுக்கப்பட் டிருக்கிறது. இக்கோயில் மூர்த்தி முன்பு சிகாநாதர் என்றே வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்று எண்ணுகின் றனர். இங்குள்ள துவாரபாலர்கள், அர்த்தமண்ட்பத்தில், ஒருவரை ஒருவர் பார்த்தவண்ண மிருக்கின்றனர். இவர் களுக்கு இரண்டு கைகளே உண்டு. மஹேந்திரவர்மன் கோயில்களில் உள்ள உருவங்களை ஒத்திருக்கின்றன. தூண்கள் திருச்சிராப்பள்ளி மலையடிவாரத்திலுள்ள குகைக் கோயில் தூண்களே ஒத்திருக்கின்றன. இங்குள்ள மலைப் பாரையில் 63 நாயன்மார்களுடைய உருவங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன. கோயில் 23 அடி 8 அங்குலம் x12 அடி 2 அங்குலம்; லிங்கம் வட்ட வடிவ முடையது. குடிமூல ராமேஸ்வரம் :-சென்னே ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி பெயர், கிருத கிருத்திய ராமேஸ்வரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/30&oldid=730261" இலிருந்து மீள்விக்கப்பட்டது