பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 குப்தேஸ்வரர் கோயில் :-விசாகப்பட்டணம் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். நடுகுன்றின் உச்சியி லுள்ளது. ஸ்வாமி குப்கேஸ்வரர் (மறைந்திருக்கும் ஈஸ்வரர் என்று பொருள்படும்) 1650 வருஷம் இங்குள்ள லிங்கம் ஜெயபூர் அரசனகிய வீரவிக்ரம கேவரால் கண்டு பிடிக்கப் பட்டது. சிவராத்திரி விசேஷம். கும்பகோணம் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜ தானி, பிரபல சிவஸ்தலம் தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன். இங்கு பல சிவாலயங்கள் உள. (1) கும்பேஸ் வரர் கோயில், ஸ்வாமி கும்பேஸ்வரர், தேவி மங்களாம் பிகை. ஏமபுஷ்கரிணி, க ச வி ரி தி, மஹாமக கீர்த்தம்; திருஞான சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. மஹாமக தீர்த்தம் 20 ஏக்ரா விஸ்தீர்ணமுடையது. இதைச் சுற்றி 16 மண்டபங்கள் உள. அச்சுத நாயக்கர் மந்திரி கோவிந்த தீட்சிதரால் இவை கட்டப்பட்டன: பரமசிவத்தின் கட்டளை யால் 12 வருஷங்களுக்கு ஒருமுறை கங்கை இக்குளத்தில் வருவதாக ஐதிகம். அச்சமயம் ஸ்நானம் மிகவும் புனித மானது ; லட்சக் கணக்கான ஜனங்கள் வருகின்றனர். இக்குளத்தின் வடகரையிலுள்ள மண்டபத்தில் துலாபுருஷ தானம் செதுக்கப்பட்டிருக்கிறது. அம்மன் ஸ்வாமி சங்கிதி இரண்டும் கிழக்கு பார்த்தவை. அம்மன் சங்கிதி ஸ்வாமி கோயிலுக்குப் புறம்பா யிருக்கிறது. இங்கு சில மண்டபங் களில் சளுக்கிய சில்ப மமைந்த துரண்கள் உள. இவை கொஞ்சம் பிற்பட்ட காலத்தியதா யிருக்கலாம். கோயில் பெரிய கோபுரம், 128 அடி உயரம், 84 அடி அகலம், கோபுரத்திலிருந்து உள்ளே போகும் மண்டபம் 83 அடி கிகளம், 55 அடி அகலம், வெளிப் பிரகாரமெல்லாம் 1,700 வருஷத்திற்கு மேற்பட்டது. லிங்கமானது ஒரு குடத்தின் உடைந்த துண்டுகளை ஒரு பேழையில், வைக்கப்பட்டிக்கிற தாகச் சொல்லப்படுகிறது. இவ்வூருக்கு குடமுக்கு என்றும் பெயர் உண்டு. பிரளய காலத்தில் சகல ஆன்மாக்களையும் சேமித்து இட்ட குடத்தின் மூக்கு தங்கிய இடமாகலின் இப்பெயர் வந்த தென்பது ஐதிகம். பிரம்மோற்சவம் சித்திரை மாசம். இக்கோயிலிலுள்ள அர்த்த காரீஸ்வரரும், கங்காளமூர்த்தியும் அழகியவை; ஏமரிஷி தாயின் எலும்பு இவ்விடம் பொற்ருமரையாக மா ழி ய கால் இங்குள்ள தீர்த்தத்திற்கு ஏம புஷ்கரிணி என்று பெயர். கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/32&oldid=730263" இலிருந்து மீள்விக்கப்பட்டது