பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 சிவகங்கை :-மைசூர் ராஜ்யம் பெங்களுருக்கு 20 மயில் கிடுவண்டா ஸ்டேஷனுக்கு 5 மயில் ரோட் மார்க்கம் , பெங்களூரிலிருந்து பம்பாய்க்குப் போகும் மார்க்கத்திலிருக் கிறது. கோயில் சுமார் 5000 அடி உயரமுள்ள ககுக்கிரி எனும் மலைமீது உளது. இம்மலை கிழக்கிலிருந்து பார்த் கால் நந்தியைப் போலவும், மேற்கிலிருந்து கணேசரைப் போலவும், வடக்கிலிருந்து சர்ப்பத்தைப் போலவும், தெற்கி லிருந்து லிங்கத்தைப் போலவும் தோன்றும், சிவாலயம் கெம்ப கெளடரால் கட்டப்பட்டதாம். ஸ்வாமி கங்காதரீஸ்வரர் கேவிசுவர்ணும்பாள், ஹொன்னுதேவி (கன்னடம்), பாதாள கங்கை தீர்த்தம், வெயில் காலத்தில் கண்ணிர் அதிகமாயும் மழை காலத்தில் கண்ணிர் குறைந்தும் போகிறது . இதற்கு தட்சிண காசி என்றும் பெயர். கோயில் கர்ப்பக்கிரஹம் குகையில் குடையப்பட்டிருக்கிறது கோயிலில் சண்டேஸ் வரர் இருக்கவேண்டிய ஸ்தானத்தில் பிரம்மா இருக்கிருரர். முகமண்டபத்தில் சப்க மாத்ருக்கள், அஷ்டதிக்பாலர்கள் நவக்கிரஹங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள பரமசிவத்திற்கும் பார்வதி கேவிக்கும் கலியானக்கோலம் அழகியது ; கோயில் உற்சவ விக்ரஹத்திற்கு பார்வதி கங்கை 2 தேவிகளுண்டு. ஹொன் னுகேவி கோவில் மிகவும் பிரபலமானது. இங்குள்ள சாக்தேஸ்வரர் ஆலயத்திலிள்ள கலியாணி தீர்த்தம் எனும் குளம் மிகவும் அழகியது. இதைச் சுற்றிலுமுள்ள சுவரில் ராமாயண பாகவத கதை க்ளின் சிற்பங்கள் இருக்கின்றன. இது விஷ்ணுவர்த்தன. அடைய மனைவியாகிய சாக்தலே தேவியின் ஞாபகார்த்த மாக் 1129u கட்டப்பட்டிருக்கலாம்; அழகிய சில்பங்க ளுடையது. மலையின் உச்சியில் ஒரு B க் தி யிருக்கிறது. அதற்குமேல் வீ ப த் தி ர் கோயிலிருக்கிறது. இங்கு பாதாள கங்கை தவிர இன்னும் ஏழு தீர்த்தங்கள் உள. மலையின் உச்சியில் இரண்டு தூண்கள் உள. ஒன்றின் கீழிருந்து மகர சங்கிராந்தி தினம் ஜலம் பெருகுகிறது. இதற்கு கங்கோத்பத்தி என்று பெயர் ; இதில் பாதி மைசூர் மஹாராஜாவுக்கு அனுப்பப்படுகிறது, மற்ற பாதி பக்தர் களுக்குக் கொடுக்கப்படுகிறது. சிவகங்கை :-செட்டிகாட்டு சிவாலயம், ஸ்வாமி கைலாச நாதர், தேவி கித்யகல்யாணியம்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/79&oldid=730314" இலிருந்து மீள்விக்கப்பட்டது