பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 இரண்டு மூன்று நாற்ருண்டுகளில் நடந்த யுத்தங்களில் கோட்டையாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. 1792-ம் வரு டம் பிரஞ்சுக்காரர்கள் வெளிப்பிராகாரத்தை ஆயுதங் கள், வெடிமருந்து முதலியன வைப்பதற்குரிய ஆயு த சாலே (Arsanel) ஆக உபயோகித்தனர். கோயில் கோட்டை யின் ஒருபக்கமுள்ளது. பெரிய கோயிலின் சுற்று மண்ட பங்கள் ராஜ ராஜனது சேனதிபதியாகிய ராமன் கிருஷ் ணன் மும்முடிச்சோன் பிரமராயனல் கட்டப்பட்டதாம். பெரிய விமானத்தின் தென்புறமுள்ள தட்சினமூாத்தி கோயில் பிறகு சேர்க்கப்பட்டதாம், 21 படிகள் ஏறி இதைப் பார்க்கவேண்டும். வடக்கிலுள்ள சிறிய சண்டேஸ் வரர் கோயில் விமானம் கட்டியகாலத்திலேயே கட்டப் பட்டது. பெரிய நந்தியும், இரண்டாம் கோபுரமும் அக்காலத் தியதேயாம். விமானத்திற்கு மேற்குபுறம் உள்ள சித்த ராகிய கருவூரர் கோயில் புதிய கட்டிடம். சிவகங்கையின் மக்தியில் லோககாத ஈஸ்வரர் ஆலயம் என்று ஒரு சிவாலய முளது. அப்பர் ஸ்வாமிகள் பாடியது இதைக்குறித்தா யிருக்கலாம். பெரிய கோயிலின் அர்த்த மண்டபத்தில் சோழ அரசர்கள் காலத்திய வர்ணம் தீட்டிய சில சித்தி ாங்கள், சிலவருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டன. சூத்திரர்கள் இந்த அர்த்த மண்டபத்திற்குள்ளும் போக லாம். பெரிய கோயிலிலுள்ள வினயகருக்கு அருமொழி வியைகர் என்று பெயர். பெரி கோயிலில் தியாகராஜர் சங் நிதியுண்டு, ஸ்வாமிக்கு விடங்கர் வீதிவிடங்கர் எனப்பெயர். தியாகராஜர் நடனத்திற்கு அஜபா நடனம் எனப் பெயர். பிரம்மோற்சவம் சித்திரை மாதம் 18 நாட்கள், உற்சவ காலத்தில் ராஜராஜன் விக்ரஹம் ஸ்வாமிக்கு முன்பாகக் கொண்டுபோகப்படுகிறது. டவல்லான் என்று ஸ்வாமிக் குப்பெயர். வியைகர் கோயில் 1801-ம் வருடம் சரபோஜி மன்னரால் புதுப்பிக்கப்பட்டது. இரண்டாம் பிராகாரத்து சுற்று மாளிகையிலுள்ள லிங்கங்கள் மஹராஷ்டிர மன்ன ரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. உட்பிராகாரத்தின் களவரிசை சரபோஜி மன்னரால் 1801-ம் வருடம் போடப் பட்டது. இவ்வூரில் பல சத்திரங்கள் உள. (1) ராஜா சத்தி ாம் ஒரு காாேக்கு 6 அணு முதல் 2 ரூபாய் வரையில் குடிக் கூலி. (2) நாயக்கர் சத்திரம் ஸ்டேஷனுக்கு 6த் பர்லாங்கு. (8) தேன்கொண்டான் சத்திரம் 2 பர்லாங். (4) கோமுட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/19&oldid=730330" இலிருந்து மீள்விக்கப்பட்டது