பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 இங்குபல தர்ம சாலைகளுண்டு-கபூர்த்தவர் தர்ம சாலை, தேவி மடம், சங்கராச்சாரியார் மடம் முதலியன கோதாவரி யின் உற்பத்தி ஸ்தானத்திலுள்ளது. வட இந்தியாவிலுள்ள 12 ஜோதிலிங்கங்களில் இங்குள்ளது முக்கியமானதாம். தீர்த்தங்கள் குசலவ கீர்த்தம், வராஹம், கபோதம் முதலி யன. ஒரே இடத்திலுள்ள மூன்று லிங்கங்கள் 8 கண்களைப் போன்றிருக்கின்றன. (திரியப்பகேஸ்வரர் மூன்று கண் களையுடைய ஈஸ்வரர்) இங்குள்ள மலைக்கு திரியம்பக்கிரி என்று பெயர். இதில் பரமசிவத்தின் 5 முகங்களின் பெயர் களையுடைய 5 சிகரங்களிருக்கின்றன. இங்கு 6 தீர்த்தங். கள் உள. கோயிலுக்கு கோட்டைக்கிருப்பதுபோல் மதில் கள் உண்டு. கர்ப்பக் கிரஹத்தில் லிங்கபீடம் மாத்திரம் உளது, லிங்கம் இல்லை, நடுவில் ஒரு பள்ளம் மாத்திரம் உண்டு; இதில் பிரம்மா, விஷ்ணு, பரமசிவம் இவர்களின் லிங்கங்கள் இருப்பதாக ஐதீகம். கோயில் 1766-ம் ஆண்டில் நானு சாஹெப் என்னும் மஹராஷ்டிரரால் புதுப்பிக்கப் பட்டதாம். ரதோற்சவம் விசேஷம் , அப்போது ரத்னகிரீ டத்தை ஸ்வாமியின் பஞ்சமுகி முகவணிக்கு சார்த்தி புறப் பாடு செய்கிருரர்கள். இங்குள்ள மற்ற சிவாலயங்கள் : கேதா ரேஸ்வரர் கோயில், சித்திரேஸ்வரர் கோயில், திரிசக்தீஸ்வரர் கோயில், கஞ்சனேஸ்வரர் கோயில், ராமேஸ்வரர் கோயில், காசிவிஸ்வேஸ்வரர் கோயில். காட்டியத்தான்குடி (திரு) :-தஞ்சாவூர் ஜில்லா, திரு ஆரூருக்கு 6 மைல், சென்னே ராஜதானி, ரெயில் ஸ்டே ஷ்ன், கோட்புலி நாயனர் சிவபூஜைக்காக வைத்திருந்த நெல்லே, அவரது பந்துக்கள் பஞ்சகாலத்தில் அபஹரிக்க, அவர்களே வாளால் வீசி தன்பக்தியைக்காட்டிய ஸ்தலம். இவரது சில கோயிலிலிருக்கிறது. நீலகண்ட ரிஷியும் யானையும் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி ரத்னகிரீஸ்வரர், கரி நாகேஸ்வரர், தேவி மலேமங்கையம்மை, அல்லது மலர் மங்கைய்ம்மை ; சூரிய தீர்த்தம். - காதத்வாரம் :-நாகாத் என்று வழங்கப்படுகிறது. இமய மலையிலுள்ள சிவஸ்தலம். காதெண்டலா:-குண்டுர் காலூகா, மேற்படி ஜில்லா சென்னை ராஜதானி, மூலஸ்தானேஸ்வரர் கோயில். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/59&oldid=730373" இலிருந்து மீள்விக்கப்பட்டது