பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(3) கால்னு கிராமம், இங்கு சிவாலயம், மஹாராஜா சந்திர பஹஆனால் கட்டப்பட்டது. இங்கு 109 சிவலிங்கங்கள் இருக்கின்றன - 66 வெளிப் பிரகாரத்தில் - 42 உட்பிரகா ரத்தில் நடுவில் வெள்ளியாலாகிய லிங்கம். (4) மாள டேஷ்வர் கிராமம் சிவாலயம், ஸ்வாமி-மாள்டேஷ்வர். பர்ஹாம்பூர் :-சென்னை ராஜதானி, கஞ்சம் ஜில்லா. சிவாலயம். பரகலி -பல்லாரி ஜில்லா, சென்னை ராஜதானி , கள்ளேஸ்வர் கோயில், சாளுக்கிய கட்டிடம். இதற்குப் பழைய பெயர் காளிதேவ ஸ்வாமி கோயில். இதில் 1000 வருடங்களுக்கு முந்திய கல் வெட்டுகள் உள. பரக்காலக் கோட்டை :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி. பட்டுக் கோட்டைக்கு 8 மைல். இதற்குப் புது ஆவுடையார் கோயில் என்றும் பெயர், திங்கட் கிழமை அர்த்த ராத்திரியில் சிதம்பரத்திலுள்ள ஈஸ்வரர் இங்கு வருவதாக ஐதீகம். பங்கடர் :-வட இந்தியா, சீரா காலுகா , சிவாலயம். பரங்கிமலை-தென் இந்தியா ரெயில்வே ஸ்டேஷன். சென்னை ராஜதானி. காசி விஸ்வநாதர் கோயில். - பரசலுர் -தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி. மாயவரத்திற்கு 5 மைல் கிழக்கு, சிவாலயம். தட்சன் யாகம் செய்த ஸ்தல மென்பர். பரங்குள்றம் :-(திரு) மதுரை ஜில்லா, சென்னை ராஜ தானி, ரெயில் ஸ்டேஷன் (சுப்பிரமணியர் தெய்வ யானையை மணந்த கேத்திரம்) சிவாலயம்; ஸ்வாமி-பரங்கிரி நாகர், தேவி ஆவுடை நாயகி, சரவணப்பொய்கை சீர்த்தம். கோயில் மலையில் குடையப்பட்டிருக்கிறது. திருஞான சம்பந்தர், சுந்தரர் ப்ாடல் பெற்ற கேத்திரம். இங்கு வெள்ளியாலாகிய சிவாலயம் ஒன்றிருந்ததாக சிலப்பதி காரத்தில் கூறப்பட்டிருக்கிறது. பரங்கிரி மலைக்குத் தெற்கில் உமையாண்டாள் கோயில் எனும் சிவாலயமுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/77&oldid=730393" இலிருந்து மீள்விக்கப்பட்டது