பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 மஹா கூடேஸ்வரர் கோயில் மிகவும் பழமையான சாளுக்கிய சில்பம், பாதாளம்:-வட இந்தியா, சிவாலயம். ஸ்வாமி-ஹட கேஸ்வரர், சுயம்புலிங்கம், பாதாளிச்சுரம் :-(திரு) பாமணி, பாம்பணி என்றும் வ்ழங் கப்படுகிறது. சாசனங்களில் பாம்புணி என்றிருக்கிறது; சென்னை ராஜகானி, மன்னர் குடி ஸ்டேஷனுக்கு 2 மைல் வடக்கு. பாம்புருவுள்ள தனஞ்ஜெய ரிஷி பூசித்த கேடித்திரம். ஸ்வாமி-சர்ப்பபுரீஸ்வரர், நாகநாதர், தேவி. அமிர்த நாயகி; நாக தீர்த்தம்; திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. பாதிரிப் புலியூர் -(திரு) திருப்பாப்புலியூர் என்று சாதாரணமாக வழங்கப்படுகிறது. கூடலூர் தாலுகா, தென் ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி ; கூடலூர் ஸ்டேஷனுக்கு 3 மைல், கோயில் திரும்பாப்புலியூர் ஸ்டேஷனுக்கு மைல் வடக்கு. வியாக்ர பாதர் பூசித்த கேஷத்திரம், இதற்கு வடபுலியூர் என்றும் பெயர் உளது. முடக்காலுள்ள முயல் ரூபத்தைச் சாபத்தில்ை பெற்ற மங்களர் எனும் முனிவர் பூசித்து அவ்வுரு நீங்கி முன் உருப் பெற்ற ஸ்தலம். கற்றுாணிற் கட்டி கடலிலிடப் பட்ட திருநாவுக்கரசு ஸ்வாமிகள் 'சொற்றுணே வேதியன்: எனும் திருப்பதிகம்பாடி கரையேறின ஸ்தலம். அந்த இடம் கரையேறவிட்ட குப்பம் என்று வழங்கப்படுகிறது. ஸ்வாமி.தோற்ருத் துணேயீஸ்வரர், பாடலீஸ்வரர், தேவி. தோகையம்பிகை, பெரியநாயகியம்மன், பெண்ணே கெடில நதி, பாதிரி விருட்சம் பிரம்மோற்சவம் வைகாசி மாசம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் பாடல் ப்ெற்றது. இங்கு பாதாளீஸ்வரர் கோயில் என்று இன்னெரு சிவாலயமுளது. சுவாமி பெயர் கல்வெட்டுகளில் திருக்கடை நாழலுடையார் என்றிருக்கிறது. சதாசிவ செட்டியார் சத்திரம் கோயிலுக்கருகி லுள்ளது. பாடலி புரம் -வட இந்தியா ரெயில்வே ஸ்டேஷன், சிவாலயம். சுவாமி. பாடலீசர்-கங்கா நதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/17&oldid=730407" இலிருந்து மீள்விக்கப்பட்டது