பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பார்க்கத் தக்கது. கோயில் 40x18 அடி விஸ்தீர்ணம், மஹா சிவராத்திரி விசேஷம். - பூர்வி வைஜ்காத் :-நிஜாம் ராஜயத்திலுள்ளது. ஜோதிர் லிங்கம் ஒன்றுள்ள சிவாலயம். பூரி பிரிவு :-வங்காள ராஜதானி, பாரால் கிராமம், சிவால்யம். எந்த வியாதியுடையவர்களும் இங்கு வந்து தரிசனம் செய்தால் நோய் தீரும் என்று எண்ணப்படுகிறது. பூவணம் :-(திரு) தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன். சென்னை ராஜதானி, பழைய சிவாலயம். ஸ்வாமி.பூவண நாதேஸ்வரர், தேவி-மின்னனையாளம்மை ; வைகை நதி, பலா விருட்சம், பொன்னனையாள் எனும் தாசிக்காக ஸ்வாமி எழுந்தருளி ரசவாதம் செய்துகொடுத்த பொன் னேக்கொண்டு அவள் ஸ்வாமி விக்ாஹம் செய்து கொடுத்த ஸ்தலம். அத்தாசி பொன்னலாகிய அந்த விக்ரஹத்தைக் கண்டு, 'அச்சோ அழகு" என்று வலது கபோலத்தைக் கிள்ளி முத்தமிட்டபடியால் அங்கு வடுவுடைய மூர்த்திக்கு * அச்சோ அழகிய பிரான்' என்று பெயர் வந்தது. தமிழ்நாட்டு மூவேந்தரும் பூசித்த ஸ்தலம். பிரம்மோற் சவம் ஆனி மாசம். மூவர் பாடல் பெற்றது. பப்புருமஹ ரிஷி பூசித்த ஸ்தலம். பூவனூர் :-(திரு) சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ல்லா, நீடாமங்கலம் ஸ்டேஷனுக்கு 2 மைல் தெற்கு. சுகரிஷி பூசித்த ஸ்தலம். ஸ்வாமி-புஷ்பவனேஸ்வரர், தேவி-சண்பகவல்லி யம்மை, கருங்குழித் தீர்த்தம், பாமணி யாற்றின் மேற்குக் கரையிலுள்ளது. சுகரிஷி புஷ்பவனம் வைத்து ஸ்வாமியை ஆராதித்தபடியால் புஷ்பவனம் என்று பெயர் பெற்றது. அப்பர் பாடல் பெற்றது. திருவிசைப்பா பெற்றது. பூவாளுர் :-லால்குடி தாலுகா, திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி, மன்மதன் பூசித்த ஸ்தலம். பூ + வாளி + ஊர். (சமஸ்கிருதத்தில் காமர்பதி என்று பெயர்) சுவாமி-திருமூல நாதர், தேவி-குங்கும செளந்தரி, வில்வ விருட்சம்; பல்குனி நதி."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/38&oldid=730429" இலிருந்து மீள்விக்கப்பட்டது