பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 போர்ராகுகை -விசாகப் பட்டணம் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். சிவராத்திரி விசேஷ்ம். (గ பொலன்னருவா :-லங்கைத் தீவின் மத்தியில் உள்ளது. பழைய பெயர் புலஸ்திபுரம் அல்லது கலிங்கபுரம், சிங்களப் பெயர் தோபாவீவா.சிவாலயம்,சிவாவயம் சுமார் 1190-u கிஸ்ளங்க மல்லர் என்பவரால் கட்டப்பட்டதென மதிக்கப் படுகிறது. முற்றிலும் கருங்கல் கட்டடம். விமானத்தின் உச்சியும், மண்டபமும் இடிந்து போயிருக்கிறது. கோயிலில் தற்காலம் பூஜையில்லை. இது தற்காலம் தளத மாளிகாவா என்று தவருக அழைக்படுகிறது. இங்கு, தற்காலம் விஷ்ணு தேவாலயம் என்று அழைக்கப்படும் கோயிலும், பூர்வத்தில் சிவாலயமாயிருந்த தென்பதற்குச் சந்தேக மில்லை; கர்ப்பக்கிரஹத்தின் பேரிலும், அடியிலும், கந்தி கள் இருக்கின்றன. இங்குள்ள கல்வெட்டுகள் ஒன்றில் சுவாமி பெயர், தேவிஈஸ்வரமுடையார் என்றிருக்கிறது. கோயில் திராவிட சில்பம். - போருமாமிலா :-Qādrడిr ராஜதானி கடப்பை ஜில்லா, சிவாலயம். சுவாமி-திரிகேத்திரர். போதன் :-பம்பாய் ராஜதானி, சூரத் ஜில்லா, மாண் டலி உட்பிரிவு. சிவாலயம், சுவாமி. கெளதமேஷ்வர் மஹாதேவ், இவ்விடம் தர்மசாலை யுண்டு. போர்பக்தர்-வட இந்தியா, ரெயில் ஸ்டேஷன், சிவாலயம். ஸ்வாமியின் பெயர் மஹாதேவ் தாகூர்ஜி. போரூர் -திருப்போரூர் என்று சாதாரணமாய் வழங் கப்படுகிறது. தென் ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜ தானி, (பிரபல சுப்பிரமணிய ஸ்தலம்.) இங்கு சிறு குன்றின்மீது சிவாலயம் உளது. சுவாமி-கைலாச நாதர், தேவி-பாலாம்பிகை, பிரணவாமிர்த்த தீர்த்தம். விஷ்ணுவும், மஹா லட்சுமியும் பூசித்த ஸ்தலம் என்பது ஸ்தல புராணம். இங்கு சுப்பிரமணியர் கோயிலுக்குள் ஒரு சிறு சிவாலயம் உண்டு. சுவாமி.காசி விஸ்வநாதர், தேவி-விசாலாட்சி. சுப் பிரமணியர் கோயிலிருக்குமிடத்தில் 800 வருடங்களுக்கு முன்பு சிவாலயம் இருந்ததாக சிலர் எண்ணுகின்றனர். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/51&oldid=730444" இலிருந்து மீள்விக்கப்பட்டது