பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 சங்கிதிமடப்பள்ளிக்கு வடக்கிலுள்ளது; கோயில் மிகவும் சிறியது; மேற்கு பார்த்தது. இங்குள்ள சங்கிதியின் வாயி லுக்கு முத்தளக்கும் வாயில் என்று பெயர்;தற்காலம் முத்த வழி என வழங்குகிறது. இது 1426u சின்னப்ப நாயகரால் கட்டப்பட்டதாம். (3) நந்தீஸ்வரர் கோயில் ஸ்வாமி சங்கிதியில் திருவாயிலின் பக்கத்தில் வடக்கு முகமாக இருக்கிறது. (4) பெத்தீஸ்வரம், வேலீஸ்வரம்: இவை இரண்டும் ஸ்வாமி கோயில் இரண்டாம் பிராகாரத் தின் மேற்றிசையிலுள்ளது. (5) முக்தீஸ்வரர் கோயில், பெரிய கோயிலில் சில நாயக்கர் அரசர்கள் காலத்திய கல் வெட்டுகள் உள. - மேற்குறித்தபடி ஸ்வாமி மோயிலுக்கெதிரில் புது மண் டபம் என்று ஒரு அழகிய மண்டபம் உளது. இங்குதான் வசந்தோற்சவ்ம் நடக்கிறது. இது 833 அடி கிகளம் 105 அடி அகலம்; இதன் நடுவில் விஸ்வநாத நாயகர் முதல் திருமலை நாயகர் வரையில் அரசாண்டவர்களுடைய சிலை உருவங்கள்அமைக்கப்பட்டிருக்கின்றன.இதைச் சுற்றிலும் வெயில் காலத்தில் ஜலம்விட ஏற்பாடு செய்யப்பட்டிருக் கிறது; இது திருமல்ை நாயகரால் கட்டப்பட்டது; பல சிறந்த சிலைகளே யுடையது. அதில் பார்க்கத் தக்கவை, ஊர்ந்துவ தாண்டவ மூர்த்தி, காளி தேவி, கலியாண சுந்தார் மணக்கோலம், ஸ்வாமி பெண் பன்றியாக பன்றிக் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டிய திருக்கோலம் முத்லியன. இம்மண்டபம் 1626u ஆரம்பிக்கப்பட்டு 1845u முடிக் கப்பட்டது. - மதுரையிலுள்ள மற்ற சிவாலயங்கள் :- பழைய சொக்கநாதர் கோயில், சிறு ஆலயம். இங்குள்ள லிங்கத் திற்கு சொக்கலிங்கம் என்று பெயர்; இது பூர்வீக ஆலயமா யிருக்கலாம். கன்மைத் தருவார் கோயிலென மற்ருெரு சிவாலயமுண்டு. இந்த இடத்திற்கு திருநடுவூர் என்று பெயர்; மேலமாசி வீதிக்கு மேற்கே யுள்ளது. ஸ்வாமி யின் பெயர் இம்மையே நன்மை கருவார் என்பதாம், தேவி. மத்யபுரநாயகி. 1218u சுந்தர பாண்டியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/63&oldid=730457" இலிருந்து மீள்விக்கப்பட்டது