பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பவானி நதிக்கு வாதி என்றும் பெயர். வானி என்பது பழைய பெயராம். கல்வெட்டுகளில் வானி என்றே இருக்கிறது. இங்குள்ள மற்ற சிவாலயங்கள்:-பராசர் கோயில், பராச ரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிக்கமுடையது; இங்கிருந்து தான் அந்தர் வாஹினியாக அமுத நதி சங்கமத் துறையில் சேர்கிறதாக ஐதீகம். பவானி சிவாலயத்திற்கு தென் மதில் சுவருக்கு 60 அடி தாரம் ஒரு சிறு கோயில் உளது. இங்குள்ள தீர்த்தங்கள் காயத்ரி தீர்த்தம், சாவித்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், தேவ கீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம், உரோமச தீர்த்தம். (2) காயத்ரி லிங்கேஸ்வரர்-காயத்ரி இத்தக் கரையி லுள்ள சிறு சிவாலயம். இது விஸ்வாமித்ரர் பிரதிஷ்டை என்பது ஐதீகம். (3) ஊராச்சி மலை கோட்டை-சிவாலயம், இதற்கு வேதகிரி என்றும் பெயர், ஸ்வாமி-வேதகிரீஸ்வரர், தேவி. வேதநாயகி, பவானிக்கு 2 மைல். பவானியிலுள்ள முசா பரி பங்களா கட்டி முதலியார்களால் கட்டப்பட்டது. பவானி சிவாலயம் அமர குந்தியில் அரசுபுரிந்த திரு மிடு கட்டி முதலியார் அவர்களாலும், அவரது சகோதரி சின்னம்மையாராலும் கட்டப்பட்டது. கோயில் காவிரியின் மேற்குக் கரையிலுள்ளது. ஆலயம் சிறிது கருங்கற்களால் கட்டப்பட்டது. 5 கோபுர முடையது, கட்டி முதலியா ருடைய அரசச் சின்னங்களாகிய விற்கொடி, புவி, மீன் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இம்முடி கட்டி முதலியார் கிருத்த மண்டபம், அம்மன் கர்ப்பக்கிரகம், அநந்த மண்டபம், மகா மண்டபம், குமார கோயில் கோபுரம், முதலியார் கட்டியதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இங்குள்ள சஹஸ்ரமுக லிங்கமும் இவரால்தான் பிர திஷ்டை செய்யப்பட்டது, நிருத்த மண்டபம் கட்டிய சிற்பியின் பெயர் இராமண்ணு ஆச்சாரி என்று வெட்டப் பட்டிருக்கிறது. கொயிலில் பள்ளியறை ஸ்வாமி எழுங் தருளுவதற்கு தந்தப் பலலக்கு 1804 வருடம் கெய்ரோ எனும் ஆங்கில துரையால் சமர்ப்பிக்கப்பட்டது. அப் பல்லக்கில் அவர் பெயரும் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/7&oldid=730464" இலிருந்து மீள்விக்கப்பட்டது