பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அலுள்ளது. 5000 அடி உயரமுள்ள மலை; மூன்று சிகரங்க ளுடையது. இங்குள்ள சி வா லய ம் குந்திதேவியால் கட்டப்பட்டது என்பது ஐதிகம். ஆரிய சில்பம். சதுரக் கர்ப்பக்கிரஹம் 11 x 11 அடி. விமானம் 80 அடி உயரம். கோயில் மேற்கு பார்த்தது. தெற்கு கோகர்ணேஸ்வரர் கோயில் என்று பெயர். மற்ருெரு கோயில் பீமன் கோயில் என வழங்கப்படுகிறது. பீமல்ை கட்டப்பட்ட தென்பது ஐதிகம்; 15 அடி சதுரம், 25 அடி உயரம் ஒரே கற்பாறையால் ஆயது; வாயிற்படி மிகவும் சிறியது. உள்ளே 5 அடி சதுரத்தில் லிங்கம் இருக்கிறது. சிவராத் திரியில் மட்டும் பூஜை, ஸ்வாமி பெயர் தற்காலம் கோகர் ணேஸ்வரர். இன்னொரு கோயில் யுதிஷ்டிரரால் கட்டப்பட்ட தென்பது ஐதிகம்; கோயில் 173 அடி சதுரம். இதன் பேரில் 15 நிலைகள் கோபுரம்போல் அமைக்கப்பட்டிருக் கின்றன. உயரம் 30 அடி. இம் மூன்று கோயில்களின் சிகரங்களும் காமரையைப்போல் அமைக்கப்பட்டிருக் கின்றன; கோவிலுக்கெதிரில் ஒரு மண்டபம் உண்டு. 20x180 அடி முடிக்கப்படவில்ல்ை. ஸ்வாமி பெயர் மஹா வ்ரதர் (மஹாவரதர்?) w மஹேஸ்வர கல்லூர் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி-விக்ரமசோளிஸ்வர முடையார். மஹீபாலன்பட்டி -பூர்வ காலத்தில் இதன் பெயர் பூங்குன்றம் என்பதாம். சென்னை ராஜதானி பாண்டி மண்டலத்திலுள்ளது. ராம நாத புர ம் திருப்பத்துர்த் தாலுகா, சிவாலயம். ஸ்வாமி பெயர் கல்வெட்டுகளில் குல சேகர ஈஸ்வரமுடைய நாயனர் என்றிருக்கிறது. மாக்கோட்டை :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ தானி, மின்னர் குடிக்கு மைல். சிவாலயம் - கீர்த்தி சேகரன் என்பவல்ை கட்டப்பட்டது. கோயில் கொஞ்சம் கிலமாயிருக்கிறது. மாகலா:-பல்லாரி ஜில்லா, சென்னை ராஜதானி தற்கா லம் வேணுகோபாலஸ்வாமி கோயிலாயிருப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/73&oldid=730468" இலிருந்து மீள்விக்கப்பட்டது