பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இங்குள்ள சுப்பிரமணியர் ஆலயத்தின் ஓர் பகுதியில் மூன்று சிரங்கள், மூன்று கரங்கள், மூன்று பாதங்க இருடைய ஜ்வாஹரேஸ்வரர் சிவ மூர்த்தம் இருக்கிறது. இங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் பவானி ாதிக்கு தென்புறம் இருக்கும் காளிங்கராயன் புதுருக்குப் பக்கத்திலிருந்தது, ஆற்றுக்கு அது இரையாகிப்போகவே, ஒரு விஷ்ணு பக்தர் பிறகு அக் கற்களைக்கொண்டு தற்கால முள் ஹ ஆலயத்தை கட்டினர்; அவர் பெயர் புலியூர் கவுண்டர். இங்குள்ள முக்கிய படித்துறைகள் :-காயத்ரி படித் துறை, திமஞ்சனப் படித்துறை, திருவேனி சங்கமப்படித் துறை. (4) சகஸ்ர லிங்கேஸ்வரர் ஆலயம் :- அமிர்த லிங்கேஸ் வரர் ஆலயத்திற்கு வட கிழக்கிலுள்ள ஒரு சிறு சிவாலயம். பவானி கோயிலில் ஆடிப் பெருக்கு விழா விசேஷம். பிரம்மோற்சவம் 12 நாள், சித்திரை மாசம். பழைய சங்கடம் -குளித்தலை தாலூகா, திருச்சிராப் பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி. ஆளவந்த ஈஸ்வரர் கோயில், தேவி அன்னவல்லி; இதற்கு பழைய ஜெயங் கொண்ட சோழ புரம் என்று பூர்வீக பெயர். பழைய சீவரம் :-செங்கல்பட்டு ஜில்லா, காஞ்சீபுரம் தாலுகா, சென்னை ராஜதானி. ஒரு சிறு குன்றின்மீது சிவாலயமுண்டு. தற்காலம் பாழடைந்திருக்கிறது; பூஜை யில்லே. பூரீ வரதராஜர் பார்வேட்டையில் தங்கும் குன்றின் பக்கத்திலுள்ளது. - பழைய மாம்பலம் -சென்ன பட்டணத்திற் கருகி லுள்ளது, சென்னை ராஜதானி. காசி விஸ்வநாதர் கோயில், பழனம் :-(திரு) தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜ தானி, திருவையாறுக்கு 1 மைல்,காவிரிக் கரையிலுள்ளது. திருக்குரங்காடு துறைக்கு 3 மைல் மேற்கு சிவாலயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/8&oldid=730475" இலிருந்து மீள்விக்கப்பட்டது