பக்கம்:Siva Temple Architecture etc..pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

ஆராதிக்கப்படும் தெய்வம் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கர்ப்பக்கிரஹம் இரண்டுவகைத்தாகும்; ஒன்று வட்டாகாரமானது மற்றொன்று சதுராகாரமானது. வட்டாகாரமான கர்ப்பக்கிரஹத்திற்கு கஜப்பிருஷ்ட ஆகிருதி உடையதெனப் பெயர் ; அதாவது யானையின் முதுகைப்போன்ற உருவத்தை உடையதென்று பொருள்படும். இந்த கஜப் பிருஷ்ட கர்ப்பக்கிரஹங்கள் பௌத்த சைத்தியங்களைப் பார்த்து கட்டப்பட்டனவென்று பெர்கூசன் துரை (Ferguson) எண்ணுகிறார், சதுராகாரமான கர்ப்பக்கிரஹங்கள் பெளத்த விகாரங்களைப்போல் கட்டப்பட்டவைகளாம். ஹிந்து ஆலயங்களில் கர்ப்பக் கிரஹத்திற்குமேல், விமானங்கள் அமைக்கப்பட்டிருக்கும். திராவிட சில்ப விமானங்கள் எல்லாம், பல மாடிகள் அல்லது அடுக்குகளுடைய பௌத்த விஹாரங்களைப்போல் கட்டப்பட்டன என்பதற்குச் சந்தேகமில்லை. இந்த மாடிகள் அல்லது நிலைகள், வரவர குறுகிக்கொண்டுபோய் கடைசியில் சிகரத்தில் முடிகின்றன. திராவிட சில்ப சிகரங்கள் எல்லாம் கலசம் போன்றவை. கர்ப்பக் கிரஹத்திற்கு எதிரில் சாதாரணமாக மண்டபம் உண்டு. ஆதியில் ஒரே மண்டபம்தானிருந்தது; பிறகு மண்டபத்திற்கு முன்பாக பெரிய மண்டபம் கட்டப்பட்டது ; முன் மண்டபத்திற்கு அர்த்தமண்டபம் என்று பெயர் வழங்கலாயிற்று. கர்ப்பக்கிரஹத்திற்கும் அர்த்தமண்டபத்திற்கும் உள்ள இடைவழி அந்தராளம் என அழைக்கப்பட்டது.

கர்ப்பக்கிரஹத்திற்கு எதிரில் பலிபீடம் அமைக்கப்பட்டது. பலிபீடம் பௌத்த ஸ்தூபத்தைப்போல் கட்டப்பட்டது என எண்ண இடமுண்டு. இதற்கு முன்பாக நமது ஆலயங்களில் துவஜஸ்தம்பம் அமைக்கப்பட்டிருக்கும்; திராவிட சில்ப ஆலயத்தில் இது ஒரு முக்கிய பாகமாம். உன்னதமான இந்த ஸ்தம்பங்களில் கொடிகளைக் கட்டி, உற்சவ காலத்தை எல்லோருக்கும் அறிவிப்பது பூர்வீக திராவிட வழக்கமாம். இதைப்பற்றி பழய தமிழ் நூல்களில் இந்திர விழா முதலிய உற்சவ காலங்களில் இந்திர துவஜம் நாட்டப்பட்டதைக்குறித்து வர்ணித்திருப்பதை கவனிக்கவும், உற்சவ முடிவில் இந்த கம்பங்கள் வீழ்த்தப்பட்டன. தற்காலத்திலும் நமது ஆலயங்களில் திருவிழாக் காலத்தில் துவஜாரோஹணம், துவது அவ

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/13&oldid=1293836" இலிருந்து மீள்விக்கப்பட்டது