பக்கம்:Siva Temple Architecture etc..pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

புறம் ஒதுக்கி, கேவலம் விஞ்ஞான ஆராய்ச்சி முறையில் பார்ப்பவர்களுக்கு ஸ்பஷ்டமாய் விளங்கும்.

(2) திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மலைக் கோயில் ஆதியில் சைவாலயமா யிருந்ததென்பத்ற்குச் சந்தேகமில்லை; இதை பிற்காலத்தில் ஸ்ரீ ராமாநுஜாசாரியார் வைஷ்ணவ ஆலயமாக மாற்றியதாக வைஷ்ணவ கிரந்தங்களே கூறுகின்றன. தற்காலமும் மூல விக்கரத்திற்கு மூன்றாவது கண்ணும், தாழ்சடையு மிருப்பதைக் காணலாம்; கைகளில் மஹா விஷ்ணுவுக்கு இருக்க வேண்டிய சங்கு சக்கரங்கள் சிலையில் கிடையாது, மேலே தொடுப்புகள்தான் போட்டிருக்கிறார்கள்.

(3) செங்கல்பட்டு ஜில்லாவில் வண்டலூர் எனும் சிறு கிராமத்தில் இருக்கும் தற்கால வைஷ்ணவ. ஆலயம், முன்பு சிவாலயமாயிருந்ததே. இங்கு பழய சிவாலயம் கிலமாய்ப் போக, மலையாக மாற்றப்பட்டு, அதன் மீது மஹாவிஷ்ணுவை ஆரொகணம் பண்ணி யிருக்கிருர்கள்; பழய சில்பங்களும் மாற்றப் பட்டிருக்கின்றன்.

(4) மதுரைக் கருகாமையிலுள்ள அழகர் கோயிலும் ஆதியில் சிவாலயமாக இருந்தது. இதன் பழய பெயர் பழமுதிர்சோலை யென்பதாம். இப்பழ முதிர் சோலை ஸ்வாமிக்குப் பல திருப்புகழ் பாட்டுகள் பாடப் பட்டிருக்கின்றன , நற்கீரர்பாடிய திருமுருகாற்றுப் படையில் இதை சிவஸ்தலமாகவே பாடியிருக்கிறார், கல்வெட்டுகளில் ஸ்வாமியின் பெயர் பரமஸ்வாமின் என்றிருக்கிறது. மலையிலுள்ள பொய்கைக்கு புண்ய சரவண மென்றே பெயர்; இங்கு தற்காலமும் வினாயகர் விக்கரமும் பைரவருடைய விக்கரமும் இருக்கிறது; இச்சந்நிதிகளில் கொடுக்கப்படும் பிரசாதம் விபூதியே. இக்கோயிலின் வெளிப் பிராகாரத்தில் சிவாலயங்களிலிருக்க வேண்டிய சில பரிவார தேவதைகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன; கருப்பண்ணன் கோயில் இவைகளில் ஒன்றாம், சப்த மாத்ருக்கள் ஆலயம் மற்றொன்றாம். இங்கு பூர்வம் சுப்பிரமணியர் ஆலயம் இருந்த இடம் தற்காலமும் காட்டப் படுகிறது. இக்கோயிலிலுள்ள வைஷ்ணவ சில்பங்களெல்லாம் புதியவை, விஜயநகரத் தரசர்கள் காலத்திற்குப் பிறகு வெட்டப்பட்டனவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/42&oldid=1293965" இலிருந்து மீள்விக்கப்பட்டது