பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை

நலக் கும்பல்கள், இதனால் கொழுத்துப் பெருக்கத்தான் செய்தன; ஓரளவிற்கு!

என்றாலும், மக்களின் தேவையை கட்டுப்பாடு அந்த நேரத்திலே ஓரளவு திருப்தி செய்யத்தான் செய் தது!

கட்டுப்படாத கல் நெஞ்சினரும், நேரத்தையறிந்து, நினைத்தபடி விலைகூறி விற்றுவந்த நெஞ்சழுத்தமான வியாபாரிகளும் வீணர்களும், இடைத் தரகர்களும் வெளிப் படையாகத் தமது வேடத்தைக் காட்டிடாது கள்ள வாணிபத்திலே இறங்கினர்.

கையிலிருந்த கையிருப்பைக் கள்ளக் கிடங்குகளி லும் கட்டிடங்களிலும் மறைத்து வைத்து, நியாய விலைக்கு விற்றிடாது, கள்ளத்தனமாகக் கண்ட கண்ட விலைக்கு கை நிறையப் பணம் பெற்று விற்று வந்த. கள்ள வியாபாரிகள் கண்டு பிடுக்கப்பட்ட போதெல் லாம், கையும் மெய்யுமாய்ப் பிடிபட்ட போதெல்லாம் தக்க தண்டனை தரப்பட்டனர்.

எத்தனை யெத்தனையேர் தொல்லைகள், நல்ல நல்ல நன்மைகளுக் கிடையில் ஏற்படத்தான் ஏற்பட்டது, அப்போது.

அந்த முறையிலே, அப்போதைய தேவைக்குத் தகுந்த முறையிலே ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட நல்ல தொரு, நன்மையுந் தந்து வந்த முறைதான் 'பங்கீடு' 'உணவுப் பங்கீடு' முறையாகும்.

52