கருணாநிதி
ஆனால் ஒரே குறிப்பிட்ட, கட்டுப்பட்ட அளவில் வரு வாயைப் பெற்று வாழ்ந்திடும் நடுத்தர வகுப்பாரின் நைந்த நிலை!
இப்படித்தானே நாடு இன்று வாடிக் காடாகிக் கொண் டிருக்கிறது, பெரும் பகுதி, இந்த மாகாணத் தின் பெரும்பகுதி, பெரும்பாலோர் வாழ்வா வாழ்கிறார் கள்? இல்லையே!
வாழவில்லை, வளமான வாழ்வு வேண்டாம், உயி ரைப் பிடித்து வைத்துக்கொண் டிருக்கும் அளவிற் காவது தன்மானத்தோடு வாழ்ந்திட வழியிருக்கிறதா?
வாழ்வுச் சுழலில் வகைகெட்டு, வக்கின்றி, வழி யின்றி, வாடி வதங்கி, தேங்கித் தவித்திடும் மக்களின் மண்டையிலே மலை உருண்டு விழுந்தது போன்ற திடீர்ச் செய்தி ஒன்று, ஆம், தோழர்களே! ஆம்! திடுக்கிடும் செய்தியொன்று, தேள் கொட்டியது. போன்று, தவித்திடச் செய்திடும் செய்தியொன்று வந்தது ஆளவந்தாரின் உத்தரவு என்று!
பங்கீடு- உணவுப் பங்கீடு என்ற அருமையான முறை, திட்டம் ஒழிக்கப்பட்டுவிட்டது, எடுக்கப்பட்டு விட்டது, தேவையற்றது
விட்டது!
என்று
தள்ளப்பட்டு
எதனால்? ஏன்? நாட்டிலே உணவுப் பொருள்களின் உற்பத்தி பெருகிவிட்டதா திடீரென்று? அல்ல, அல்ல பின் எதனால்?
59