புராணப்போதை
நாட்டிலே பங்கீடு தேவையில்லை என்று கூறிடும் அளவிற்கு மக்களின் மனநிலையும், மண்வளமும் வளர்ந்து பண்பட்டு, ஒழுங்குமுறை கட்டுப்பட்டு விட்டதா?
இனி விலை ஏறாதா? வீணாக முடங்காதா. விளை பொருள்கள்? என்றெல்லாம் யோசித்து, முடிவு கட்டிய தின் விளைவால் விளைந்த நல்ல முடிவா பங்கீடு ஒழிப்பு?
இதெல்லம் காரணமல்ல, காரணமாகக் காட்டப் படவில்லை,கூறப்படவுமில்லை!
எல்லாம் பகவான் மீது பாரத்தைப் போட்டு பாராளும் ஆச்சாரியார் செய்த வேலை; திடீர்த்திரு விளை யாடல்! திருப்பணி!
பகவான் மீது பாரத்தைப் போட்டு உணவுப் பங்கீடு முறையை ஒழித்துவிட்டேன் என்று ஆச்சாரி யார் அறிவித்தார்.
பங்கீடு முறையைப் பற்றி ஓயாத, ஒழியாத, தீராத, தீர்க்கமுடியாதென்று நினைத்திடும் அளவிற்கு குறைகளும், குற்றங்களும், ஊழல்களும் முறையே தவறானதால் அல்ல, முறையை நிறைவேற்றி, முடியாத முறையற்ற முறைகளைப் பற்றிப் பலரும் பேசி, கண்டித்துக் காட்டிக் கேட்டிடத் துணிந்துவிட் டனர், என்ற எண்ணமா? பயமா? கையாலாகா கோழை யின் செயலா? எது உண்மையான காரணம் பங்கீடு ஒழிப்பிற்கு!
பகவான்மீது பாரமாம், பங்கீடு ஒழிப்பிற்கு !
60