பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி

பங்கீடு- இருப்பவனிட மிருந்து, அவனுக்கும் தேவையானதை, எல்லோரையும்போல் எண்ணி, நடத் திப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, விலை கொடுத்து சர்க் காரே விளை பொருள்களை வாங்கி, நேரடியாக மக்க ளுக்கு, நியாய விலைக்குப் பங்கிட்டுத் தரும், நல்ல நேர் மையான நாகரிகமுமான முறை இன்று தேவையற்றது. என்று நிலைமையின் தெளிவால் அல்ல. நிர்வாகக் குறை பாட்டால். கோளாறால், நாட்டிலே, நாட்டு மக்க ளிடையே ஏற்பட்ட கொந்தளிப்பை, மனச் சங்கடத் தின்மூலம் வெளியிடப்பட்ட மனக்குறையைத் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தவிர்த்திடும் எண்ணமே இல் லாத காரணந்தான் என்று மக்கள் கேட்க மாட்டார் களா, மீண்டும் முன்னைய பஞ்சநிலை, பரிதவிக்கும் அதிக விலைப் பளுவின் சுமையைத் தாங்காது தவித்திடும் போது?

எண்ணிப் பாராது எடுத்து விட்டனரே, பங்கீடு முறையை! அடுத்த கணத்திலிருந்து விலை, உணவுப் பொருள்களின் விலை ஏறிட வில்லையா? ஏன் மவுனம்?

நல்ல அரிசிக்கு அதிக விலை தரத்தானே வேண்டும் என்று குதர்க்கம் வேறு பேசப்படுகிறது வெந்த புண் ணிலே வேல் பாய்ச்சிடுவது போல !

நல்ல அரிசி, இப்போது மட்டும் எங்கிருந்து வங் தது? எங்கே யிருந்தது. இத்தனை நாளாய் நாடாள்வோ ரின், நல்ல நிர்வாகத்தின்போது நாற்ற மெடுத்தவைக ளாகவே தரப்பட்டனவே? ஏன்? என்று மக்கள் கேட்கி

61