கேள்விக்குறி!
கேள்விக்குறி! கேள்விக்குறி! நண்பர்களே, கேள்
விக்குறி!
மனித வாழ்வில் மகத்தான மாறுதலை உண்டாக். கிடும் அறிகுறியாகும் கேள்விக்குறி!
எதையும் எண்ணிப் பார்த்திட -ஏன், எதனால், எப்படி என்று ஆராய்ந்து தெரிந்திட, புரிந்திட கேள் விக்குறி போட்டுத்தானே தீரவேண்டி யிருக்கிறது!
கேள்வி
கேட்டிடும் வாய்ப்போ. வசதியோ, தெளிவோ, அதைவிடத் துணிவோ இல்லாவிடின். எதைத்தான் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும், புரிந்து கொள்ளவும் முடியும்?
'காலையில் எழுந்திரு! காலைக் கடன்களை முடி! கடவுளைப் பாடு பக்தியோடு!' என்று கூறியதும் கண்ணை மூடிக்கொண்டு பணிந்து வந்த காலம் மாறி தான் விட்டது! ஏன் என்று கேள்விக்குறி கிளம்புகிறது. பகுத்தறிவாளரிடமிருந்து!
பகுத்தறிவாளரிடமிருந்து கிளம்பிடும் கேள்விக் குறி காலையில் எழுந்திருப்பது பற்றியுமல்ல, காலைக் கடன்களை முடிப்பது பற்றியுமல்ல. கடவுள் என்ற துமே, கடவுள் என்றால் என்ன? யாரெல்லாம் கடவுள்?
5
65