பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை

எது கடவுள்? யார் கடவுள்? எதனால்? எதற்காக?ஏன்? என்பது பற்றியதாகத்தான் இருக்கும்; இருக்கிறது.

காலத்துக்கும் கருத்துக்கும். நன்மைக்கும் நடை முறைக்கும் ஒத்துவரும் எந்தவிதப் பொருள், போக்கு பற்றிய பொருளற்ற கேள்விகள் கிளம்பிடாது பகுத் தறிவாளர்களிடமிருந்து காலையிலே எழுந்திருப்பது, காலைக் கடன்களைக்

கருத்தோடு முடித்திடுவது, தொடர்ந்து தனது கடமைகளைச் செய்வது முதலியன வெல்லாம் மனித வாழ்வில் மிகமிக முக்கிய, ஆனால் மிகவும் சாதாரணமாக இருக்கவேண்டிய நித்ய நடை முறை நிகழ்ச்சிகளாகும்.

அறிவு வளர்ச்சிக்கும். ஆரோக்கியத்துக்கும் அன் றாட வாழ்வுப் பிரச்னைக்கும் ஏற்ற, தேவையான தெளிந்த தினசரி நிகழ்ச்சிகளைக்கூட மனிதன் கடமைக் காக அல்ல, கடனுக்காக, கடவுளின் கடாட்சத்துக்காக என்று கட்டுப்பட்டுச் செய்திட வேண்டிய கட்டுப் பாடற்ற கடமை உணர்ச்சி உள்ளவனாக காட்சியளிக் கின்றானே. கடவுளே கதியென்று நம்பி இருக்கிற காரணத்தால்! ஏன்? ஏன் என்று எண்ணிடும் நேரத் திலே எண்ணற்ற கேள்விக் குறிகள் எங்கள் உள்ளங் களில் தாண்டவமாடத்தான் செய்கின்றன. எண்ணற்ற கேள்விக் குறிகள் தாண்டவமாடுகின்றனவே, தோன்று கின்றனவே என்போன்றாரின் எண்ணத்திலே மட்டு மல்ல, என்போன்றாரின் எண்ணத்திற்கு எதிரிடையான எண்ணங்களிலே ஊறித் திளைத்திடுவோரின் எண்ணங் களிலேயும் தான் ஏற்படுகின்றன.

66