கருணாநிதி
கேள்வியின்றி, கேள்விகள் கேட்டுப் பெறும் கேள்வி ஞானமின்றி, கேள்விகள் கிளப்பிடும் புதுப்புது பிரச்சினைகளின்றி, பிரச்சினைப் பற்றிப் பேசி, படித்து, ஆராய்ந்து பெற்றிடும் படிப்பினை பாடம், தெளிவு மின்றி, மனித மனம் எதையும் சரிவரச் செய்திடும் ஆற்றலை. மனவலியை, மனவளத்தை யடைந்திட
முடியாது என்பது உறுதி.
மனவலிமை, மனவளம் மனிதனை மனிதனாக, மிருக வாழ்வினின்றும், காட்டுத்தனமான கண்மூடி வாழ்க்கையினின்றும் பிரித்து, பண்படுத்தி, பக்குவப் படுத்திப் பலருடன் பழகும் பழக்கத்தையும், வழக்கத் தையும், தான் வாழ, பிறரும் வாழ வாழ்ந்திடும் வள மான், வாழ்க்கையின் இலட்சியத்தைக் கொண்டு வாழ்ந்திடும் நிலையிலே, நினைப்பிலே, நடைமுறை யிலே செலுத்தி, கட்டுப்படுத்தி, கண்ணிய வாழ்வு. களங்கமற்ற காலவேகத்தோடு கடுகி முன்னே றிய முன்னேற்ற வாழ்வு, விஞ்ஞான வாழ்வு. வாழ்விக்கும் வாழ்வு, நல்ல வாழ்வு. நாகரிக வாழ்வு வாழ்ந்திட வழி காட்டி, நிலைநாட்டுகிறது.
கேள்வி கேட்பது குற்றமென்று கருதப்படும் நாடு இது. ஒரு வகையில் மட்டுமல்ல, பலப்பல வகைகளி லும்.
சிறுவன், வீதியிலே நடந்து செல்லுகிறான், தந்தை யோடு !
69