கருணாநிதி
'பெட்ரோல்ல போவுதடா, வாடா, சும்மா, வண்டி மேலே ஏறிடப் போவுது. என்று அதட்டிக் கை பிடித் துச் செல்வார் வேகமாக!
'பெட்ரோல்னா என்னாப்பா, எப்படிப்பா இருக்கும். எப்படிப் போவுதுப்பா!' என்று மேலும் சிறுவனது சிந்தனையி லிருந்து கேள்விகளை கிளப்பிக் குழப்பிக் கொண்டே யிருக்கும்.
'ஏம்பா, எனக்கும் கார் வேணும்ப்பா. என்று குழந்தை கொஞ்சும், கொஞ்சும், சிறிது தயங்கிப் பயந்தபடி!
மூதேவி நீ வாழற லட்சணத்துக் கார் வேறயா' என்று முதுகில் அறையும் அறையுடன் சிறுவனது எண்ணத்திலிருந்து கிளம்பிய கேள்விக் குறிகள் கலைக் கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படும்?
சில பல, வசதியும் வளமான வாழ்க்கைத் தரமும் கொண்டவர்களின் வீட்டுப் பிள்ளைகட்கு, மோட்டா ரைப் பற்றிய செய்திகள் மட்டுமல்ல, மாதிரி மோட் டார்களுங்கூட விளையாட்டுக் கருவிகளாகக் கிடைத் திருக்கிற காட்சியையும் நாம் காணாதிருக்கவில்லை!
இதிலே நாம் கவனிக்கவேண்டியது; முக்கியமாகக் கூர்ந்து, ஆராய்ந்திட வேண்டிய நிலை, நினைப்பு உள் ளடங்கி யிருக்கிறது!
சாதாரண மோட்டார் பற்றித் தெரியாதவர். அது எப்படி உண்டானது, யார் கண்டு பிடித்தது, எப்படிப் போகிறது என்பன போன்ற செய்திகள் தெரியாதது
71