பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை

இத்தகையாளர், தங்களை மட்டுமல்ல, தம்மினத்த வரையே தம்முடன், தமது வழியில், பாதையில்- போதையில் உடன் வரவேண்டு மென்று விரும்புவது மட்டுமல்ல, விடாப் பிடியாகத் தொடர்ந்து தொடர்ந் துப் பேசி போதித்து, பார் பார் நாகம் பார் என்று மருட்டி, மிரட்டி, அதே நேரத்தில், அலங்கார, ஆயாச மற்ற, ஆட லழகிகள் நிறைந்த இந்திர சபையையும் கற் பக விருக்ஷம்,காமதேனு போன்றவைக் காட்டி இன்பச் சுவையேற்றிப் போதை யூட்டித் தம்முடன் மயங்கி யேனும் வந்தாக வேண்டும் என்று எதையும் செய்கின் றனரே!

இதற்காப் பழைய பாடல்கள்-புராணங்கள் பெரி தும் செல்வாக்குடன் கையாளப் படுகின்றன!

புராணங்கள் -அவைகளால் என்ன பலன்? பயன்? என்ற கேள்விகள், கேள்விக் குறிகள் எம்மை அதிகம் கேட்டிடச் செய்கின்றன இன்றைய ஆட்சியாளரின் போக்கும், அவரைத் தாங்கி நிற்கும், பணக்காரர்களை யும், பண்டார சன்னதிகளின் போக்கும், பேச்சும்!

78