பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை

பஸ்மாசுரனைப் பார்த்து, 'அப்பா, உன் தவத்திற்கு மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும். கேள்; தந்தோம்' என்றார்.

உடன் பஸ்மாசுரன், 'ஐயனே, எவருடைய தலை மீது நான் கை வைத்தாலும் அவர்களெல்லாம் அப்ப டியே பஸ்பமாகிவிட வேண்டும், எரிந்துவிடவேண்டும். என்று கேட்டதும், 'தந்தேன். தந்தேன்' என்று சிவனார் வரமருளிவிட்டார்.

அசுரன் அகமகிழ்ந்தான். அடுத்த கணம், தங்கள் வரத்தின் மகிமையை முதலில் தங்கள் தலைமீதே கை வைத்துப் பரிட்சித்துப் பார்க்கிறேன்' என்று சிவனாரின் தலைமீது கைவைத்து அவரையே பஸ்பமாக்கி எரித்து விட ஓடி வந்தானாம்.

எல்லாம் வல்ல எம்பெருமான் என்ன செய்தார்? எதிர்த்து நிற்கவில்லை. ஏனடா இந்த அக்கிரமம் என்று கேட்டுக்கொண் டிருக்கவில்லை. தலை தப்பினால் போதும் என்று ஓட்டமெடுத்தாராம்!

அசுரன் துரத்துகிறான், துரத்துகிறான் சிவனாரை! துரத்தித்துரத்திச் சிவபெருமானை விடாது தொடர்ந்து பிடித்திட ஓடுகிறான்.

சிவனார் திக்கெட்டும் ஓடியோடி அலுத்துவிடு கிறார். ஓடவே முடியவில்லை. ஓடிவருபவனோ விட்ட பாடில்லை. அவரைத் தேடித் துரத்துவதை! நின்றால் நெருப்பாகி வெந்து நீறாகிவிடுவோம். அவன் தலைமீது

88