கருணாநிதி
கைவைத்தால், என்ற கவலை! என்ன செய்வார் சிவ லிங்கனார்.
திரும்பிப் பார்த்தார். அருகே அய்வேலங்கொடி காய்த்துக் குலுங்கிக்கொண் டிருந்ததைக் கண்டார். ஓடி அய்வேலங்காயினுள் ஒடுங்கி அடங்கி ஒேளித்துக் கொண்டாராம், அசுரனிடமிருந்து தப்ப, தன்னுயிரைத் தீ தழுவாதிருக்க! சிவபெருமான் ஒளிந்து கொண்டது மட்டுமல்ல, சிவனார் காக்குங் கடவுளாகிய மகா விஷ்ணுவை நினைத்து, தாம் உடனே விஷ்ணு சிவனா ரின் சிக்கலான நிலையைச் சீர்படுத்திட மோகினி உருவங் கொண்டு சிவனைத் தேடியலைந்த பஸ்மாசுரன் முன் தோன்றினாராம்.
மோகினி! அசுரனை மயக்கி, அவனை மடிய வைத்து, சிவனாரை வாழவைக்க விஷ்ணு மோகினி பூண்டார். மோகினிப் பெண்ணாகவே மாறிவிட்டார்.
வடிவு
மோகினியைக் கண்டதும் பஸ்மாசுரன் மையல் கொண்டான். மோகினியும் இசைவதுபோல் நடித்தாள். அசுரன் நெருங்கும் நேரத்திலே, தூர விலகி, 'குளித்து விட்டுவா!' என்று அனுப்பினாள் மோகினி/
அசுரன் குளிக்கச் சென்றான். இதற்குமுன் மோகினியான விஷ்ணு தமது சக்தியால் எங்கும் ஆறு, கிணறு, குளம், குட்டை எதிலுமே நீரில்லாது வறண்டு போகும்படி செய்துவிட்டார்.
குளிக்கச் சென்ற அசுரன் நீரில்லை என்று திரும்பி வந்தானாம்.
89