பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை

மோகினி, கொஞ்சம் ஈரத்தோடு கூடிய சேற்றை யாவது தலையில் தெளித்துக்கொண்டு வா என்று அனுப்பினாள்.

திரும்பச் சென்ற அசுரன் மோகினியின் விருப்பப் படி ஒரு குளத்தில் சிறிது சேறும் சகதியுமான நீர் இருந்ததைப் பார்த்தான்.

பார்த்தவுடன், பாவைமீது கொண்ட பாசத்தால், போதையால், தான்செய்வதை மறந்து, அதன் விளைவை மறந்து சேற்று நீரை மொண்டு தன் தலையில் தடவினான்.

சிவனாரிடம் மீளாத தவம் செய்து பெற்ற வரத் தின் மகிமைப்படி பஸ்மாசுரனின் தலைமீது அவன் கை பட்டதும் எரிந்து பஸ்பமாகிவிட்டான்.

அசுரன் ஒழிந்தான்! மாபாவி மடிந்தான்; மகா விஷ்ணுவின் மாயாஜாலத்தால், மோகினி வடிவைக் கண்ட மயக்கத்தால்!

அய்வேலங்காயிலிருந்து சிவனை வெளியே வரும் படி செய்தார் விஷ்ணு, அரக்கன் அழிந்ததை எடுத்துக் கூறி!

வெளி வந்த சிவன் விஷ்ணுவின் மோகினி வடி வைக் கண்டு மோகித்து, விஷ்ணுவான மோகினியைப் புணர்ந்தாராம் என்று மேலும் புராணம் போய்க் கொண்டே யிருக்கிறது.

சிவன் ஓடி ஒளிந்த காலம் முதற்கொண்டு அய்வேலங்காயின் விதை சிவலிங்க உருவில் இருக்கிறது.

90