கருணாநிதி
என்று மக்கள் நம்பி, அதன்மேல் குறிப்பிட்ட கடவுள் கதையை, புராணத்தை புராணப் புத்தகத்திலும். புராண பிரசங்கங்களிலும், நாடகம், சினிமா முதலிய எல்லாவற்றிலுமாகக் கண்டு, கேட்டு மறக்காமலிருக் கின்றனர்; மறக்க முடியாது செய்யப்படுகின்றனர்.
சிவனின் திருவுள்ளம் திருப்தி பெறும் அளவுக்குத் தவ வலிமை படைத்தவன், திடீரென்று தீயோனாக வரம் கொடுத்த கடவுளையே கொல்லத் துணிவானா?
போகட்டும். சிவனால், சர்வேசுரனால், சர்வவல் லமை படைத்தவனால், வரமருளும் வல்லமை படைத்த வனால் தீயோனின் தீக்குணத்தைத் திருத்த முடிய வில்லையா?
சிறு கொடியின் காய்க்குள்ளே ஒளிந்துகொள்ளும் சக்தி படைத்த கடவுள், திக்கெட்டும் சுற்றிப் பயந்து ஓடுவானேன், அசுரனிடம் அகப்படாதிருக்க!
இது?
திரிபுரமெரித்த சிவனின் சக்திக்கே இழுக்கல்லவா
எல்லாவற்றையும், விஷ்ணுவின் பெண்ணுருவைக் கண்டு பயந்து ஒளிந்து வெளிவந்த சிவன் மோகங் கொண்டு காமாந்தகாரனாகி புணர்ந்தாராமே புண்ணிய புராணப்படி! அடுக்குமா இந்தச் செய்கை, ஆண்ட வனுக்கு?
அநாகரிகமல்லவா, ஆணான விஷ்ணுவை, தன் னைப் போன்ற கடவுளை, தன்னைக் காப்பாற்ற பெண் ணுருவான விஷ்ணுவை கண்டதும் கருத்தழிந்து,
91