பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி

மூவரும் தேவரும்.முனிவரும் அனைவரும் அக்கினி யைக் கண்டு பிடிக்க முனைந்தனர். எவராலும் முடிய வில்லை, அக்கினியை அழைத்து வர! எப்படி முடியும்?

பார்த்தார் வாயு பகவான் உடனே எமனை உட்பட யாவருக்கும் விருந்து ஏற்பாடு செய்தாராம். எமதரும் னுக்குப் பக்கத்திலே அதிகப்படியாக இரண்டு இலைகள் போடப்பட்டது. 'யாருக்கு' எமன் கேட்டதும், உன் வயிற்றி லிருக்கும் பெண்ணை வெளி யிட்டால் சரியா கும், என எமன் பயந்து பெண்ணை வெளியில் விட்டா னாம்.

வாயு பகவான் 'பெண்ணே, உன் வயிற்றி லிருக் கும் அக்கினியை அனுப்பு வெளியே', என்றதும் அக் கினி பயந்து பயந்து வெளியே வந்தாராம்.

அக்கினி அலறிப் பயந்து பெண்ணின் வயிற்றி லிருந்து வெளி வரும்போது, அந்த மங்கையின் மீசை யும், தாடியும் அக்கினிச் சுவாலையால் அடியோடு கருகிப் போயினவாம்.

அன்று முதல் பெண் இனத்திற்கே மீசையும் தாடி யும் அடியோடு அற்றுப் போயின என்று ஒரு புராணக் கதை மக்களிடையே உலவி வருகிறது! எவ்வளவு

வேடிக்கை!

இதிலே, இந்தப் புராணக் கதையிலே எத்தனை ஆபாசம், ஆண்டவன் எனப்படுவோரின் அர்த்தமற்ற ஆபாச நடத்தைகள் இருக்கின்றன.

7

97