பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/2

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 இயல்பூக்கம் சிலர் இயல்பூக்கம் விருப்பத் தொழிலே யாகாது; அதற்கு வெகு நாட்பட்ட நோக்கமோ, உடன் நோக்கமோ கிடையாதென்பர். இயல்பூக்கச் செய லனைத்தும் இணைக்கப் பெற்ற மறிவினைத் தொடரே (Chain reflex) யென்பர். இயல்பூக்கம் ஒரு தனி வகைச் செயலன்று என்பர். அதில் ஒவ்வொரு துலங் கலும் அடுத்த துலங்கக்குத் தூண்டலாகும். இம் மறிவினைத் தொடர்க் கொள்கையை எப்போது ஒப்புக் கொள்ள வேண்டுமெனில், இயல்பூக்கம் மாமுத செயல் தொடராயிருந்தால், - அதாவது, பொறியியக்கம்போ லிருந்தால் தான் நாம் அதை ஒப்புக்கொள்ள வேண்டி யவர் ஆவோம். ஆனால் இயல்பூக்கத்தின் முக்கிய அமிசம் மாறும் முயற்சிகளோடு கூடிய பிடிவாதப் போக்கு என்பதாகும். கூடு கட்டுதல் போன்ற இயல்பூக்கச் செயலே, கட்டும் இடம், கட்டப் பயன்படுத்தும் பொருள் (வாழை நார், வைக்கோல், தென்னந்தும்பு, பன்னாடை), கூடு அடைந்திருக்கும் நிலை ஆகியவற்றிற்கும் ஏற்ற வாறு குருவி அமைத்துக்கொள்கிறது. நுண்ணறிவுக் குறிகளோடும் மாறும் முயற்சிகளோடும் கூடியதுமான இத்தகைய பிடிவாதச் செயலை, எந்திரப் போக்கானதும் மாறாததுமான மறிவினைத் தூண்டல் துலங்கல் தொடர் என எங்ஙனம் விளக்க முடியும்? மறிவினை போலல்லா மல் இயல்பூக்கம் அனுபவத்தால் மா.றுபாடடைகிறது. கட்டும் கூட்டைப் பற்றிய எண்ண மோ, விம்பமோ குருவக்குக் கிடையாதென்றும், அது எடுத்து வைக்கும் அடுத்த சுள்ளிக்கு மேல் - அது பார்ப்பதில்லையென்றும் சொல்லுவது சரியன்று. வெகுநாள் கொண்ட நோக்க மின்றி இச்செயலை விளக்கமுடியாது. ஆனால் இந் நோக்கம் குருவிக்கு எங்ஙனம் கிடைத்தது? தன் பெற் றோரது கூட்டின் நினைவாலென்பதற்கில்லை. ஏனெனில், தன் இனத்தை விட்டு வேறு இனப் பறவையின் கூட் டில் பொறிக்கப்பட்ட குருவி தன் இனத்திற்கேற்பவே கூடு கட்டுகிறது. இதிலிருந்து இயல்பூக்கச் செயல் மிகவும் சிக்கலான பிரச்சினையென்று காண்கிறோம். இரையின் மேல் பாயப் போகும் புலிக்கு இரையைக் கடித்துத் தின்பதுபற்றிய முன்னறிவு இல்லையென்று சொல்ல முடியுமா? ஆகவே, இயல்பூக்கம் பொறி யியக்கம் போன்ற குருட்டுப் போக்கான செய லாகாது. மனிதனும் இயல்பூக்கமும்: விலங்குகளின் செயல் கள் முற்றிலும் இயல்பூக்கச் செயல்களே. மக்களின் செயல்களில் இயல்பூக்கச் செயல்கள் அவர்களது சிந்தனா சக்தியால் மாறுதல்களடைகின்றன. பசித்த வுடன் உணவை விரும்பவும், திகிலடைந்ததும் ஓடவும், ஆராய்வு ஆசை எழுந்ததும் ஆராயவும் நம்முடைய இயல்பூக்கங்கள் தூண்டுகின்றன. ஆனால் இவையொன் றையும் நாம் செய்தே தீரவேண்டுமென்பதில்லை. நம் இயல்பூக்கங்கள் உள்ளத்தின் ஆதிக்கத்துக்குட்பட் டவை; மாறும் தன்மையும் வாய்ந்தவை. இயல்பூக்கம் இறுதி இலக்கைத் தருகிறது. ஆனால் நுண்ண றிவு இவ் விலக்கைப் பெறும் வழிவகைகளைத் தீர்மானிக்கிறது. ஒரு தாய் தன் குழந்தையின் நலத்தை இயல்பூக்கத்தின் பயனாக விரும்புகிறாள் என்றாலும், அவள் தன் நுண்ணறி வினால் அந்நலத்தை மீனெண்ணெயைக் கொண்டோ, இலேகியத்தைக் கொண்டோ பெறுகிறாள். நுண் ணறிவு இறுதி இலக்கைக்கூட மாற்றி வேறு பயனை நாடச் செய்யும் ஆற்றலுடையது. இதையே உயர்மடை மாற்றம் (Sublimation) என்பர். யானை மரங்களைப் பிடுங்கி, மனிதர்களைக் கொல்லும். ஆனால் அதன் பலத்தை நல்வழியிற் பழக்கிவிட்டால் அரிய பெரிய வேலைகளைச் செய்யும். ஒருவன் தன் போரூக்________________