பக்கம்:Tamil varalaru.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 த மி ழ் வ ர ல | று மணந்த மகளிர்க் கின்றியமையாதாதலுஞ் சங்க நூல்களிற் கண் டனவாம். ஈகை யரிய விழையணி மகளிரொடு ' (புறம். 137) என்பதும், அதற்குப் பழைய உரைகாரர், பிறிதோரணிகலமுமின்றிக் கொடுத்தற்கரிய மங்கலிய குத்தி ரத்தை யணிந்த மகளிருடனே ' எ ன உரைத்ததும் கோக்கிக் கொள்க. மங்கலவணி யிழந்தவளைக் கசிகல மகடூஉ (புறம். 261) என்பதலுைம் இம்மங்கலக்கலன் உண்மை யுணரப்படும். மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்" (சிலப். அந்தி.50) எனவும் ' மங்கலவணி யெழுந்தது ' (சிலப். மங்கல.) மாங்கலிய சூத்திரம் வலஞ் செய்தது." எனவும் வருவனவற்றை இதற்கியையவே கொள்ளப்படும். இள் வாறு திருப்பூட்டுதல் வழக்குப்பற்றிக் கம்பகாடர், மங்கலக் கழுத்துக்கெல்லாம், தானணரியாயபோது தனக்கணியாது மாதோ' (கம்பரா. கோலங்காண். ?) எனப்பாடுதலால் இவ்வழக்கம் அவர் காலம்வரைத் தொடர்ந்தது புலம்ை. அதுவே இன்றுவரை நிகழ்வதும் காண்க. புறப்பாட் டுப் பழையவுரைகாரர், ' மெல்லிய மகளிரு மிழைகளைந்தனரே ' (புறம் 234) என் புழி இழை அருங்கலவணி என்பர் தமிழ் காட்டு கல்லிசை வாய்ந்த மெல்லியலார் தாம் மிகவும் உயர்வாகக் கருதிய சீரிய ஒழுக்கம் இதுவே என்றற்குப் பழைய தோர் உண்மைச்சரிதையும் உண்டு. சோழர்க்குச் சிறந்த புகார்ப் பட்டினத்து வணிககுல மாதாகிய விசாகை யென்னுங் கன்னி தன் அத்தை மகனாகிய தருமதத்தைேடு யாழோர் முறைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/116&oldid=731266" இலிருந்து மீள்விக்கப்பட்டது