பக்கம்:Tamil varalaru.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தமிழ் வரலாறு இவற்ருன் இவர் வழிமுறை ஆண்வழி முறையே என்பது கன்கு தெளியலாகும். இவற்ருெடு பொருந்தவே கச்சிமாநகர் புக்ககாதையுள் மாசாத்துவான் மணிமேகலையை நோக்கிக் கூறிய கூற்றில், நின்பெருக் தாதைக் கொன்பது வழிமுறை முன்னேன் கோவலன் மன்னவன் றனக்கு நீங்காக் காதற் பாங்க ளுதலின் ' (123-125) என வருதலைக் கற்ருரறிவர். இதன் கண் கின் பெருந்தாதையென் றது மதுரையிற் கொலையுண்ட கோவலனேக் குறித்ததாகும். அவனுக்கு ஒன்பதுவழிமுறை முன்னேனும் கோவலன் என்னும் பெயருடையன் என்றும், அம்முன்னேனகிய கோவலன் அம்முற் காலத்து வஞ்சியிலிருந்த சேரவேந்தனுக்குக் காதற்பாங்கனென் ஆறும் இதன்கட் கூறுதல் தெரியலாம். இவ்வடிகளிற் கொலே யுண்ட கோவலற்கு ஒன்பது வழிமுறை கூறியது தந்தை மகன் பேரன் முதலிய பிதிர்வழியே யன்றித் தாய் வழிமுறையன்றென் பது கோவலனுக்கு முன்னேன் கோவலன் எனக் கூறியதனு னன்கு துணியப்படும். அக்காலத்து வஞ்சியிலிருந்த ரசாண்டமன் னவன் மணிமேகலை புக்கபோது வஞ்சியையாளும் மன்னவனுக்கு முன்னேன் மன்னவனகி ஒன்பது தலைமுறையால் முந்தியவனு தலும் உடம்பொடு புணர்த்திக் கூறியவாரும். இங்கனமில்லாது மன்னவன் வழிமுறை சிறுகியும்பெருகியுமிருந்தால் அவற்றிற்குத் தக்கவாறு விளங்கிக்கொள்ள ஏ ற் ற சொற்பெய்து கூறுவர் என்க. ஒன்பது வழிமுறை முன்னேன் கோவலன் எனவும் ஒன்பது வழிமுறை முன்னேன் மன்னவன் எனவும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தவாறிஃதென்க. இப்போது ஆளுஞ் சேரவேந்தனுக்கும் கொலையுண்ட கோவலற்கும் ஒன்பது வழி முறை யொத்தலா னன்றே இவ்வாறு சேர வெடுத்துக் கூறிஞர். வழிமுறை கோவலனுக்கொருபடியும் மன்னனுக்கு வேறு படி யும் ஆயின் இங்ஙனம் சேரவெடுத்தாளப்படுமா என்றுஅறிஞரே விகுவித் தெளிக. கோவலன் வழிமுறையும் மன்னவன் வழி முறையும் எண்ணினுக் தாயமுறையினும் ஒத்தவாறு இதனுல் எளிதிலறியலாம். வழிமுறை யென்ற தொடர் தமிழ்ப்பண்டை கால்களிற் றங்தை காய மெய்திய மக்கள் வழியே குறிப்பதென் பது புறப்பாட்டில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/186&oldid=731343" இலிருந்து மீள்விக்கப்பட்டது