பக்கம்:Tamil varalaru.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 த மி ழ் வ ர ல ம குத்திரத்து உரையிற் கூறுதலால், மாபுராண்மும் பூதபுராண மும் சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு எளிதில் உபகாரப் படாதபடி எத்துனேயோ வகையாற் பரந்துபட்ட பொருளே யுடையன வென்றும், அது பற்றியே தொல்காப்பியனர் தொகுத் துச்செய்து வழங்குவித்தனரென்றுக் தெளியலாம். இசை நுணுக்கம் :-இந்நூ ல் செய்தவர் தேவவிருடியாகிம், குறுமுனிவர் மாளுக்கர் பன்னிருவருள் சிகண்டி என்னும் அருந்தவ முனிவர் என்பது மேலே கூறினேம். அகாகுலன் என்னுங் தெய்வப்பாண்டியனுக்கும் திலோத்தமை என்னுக் தெய்வ மகளுக்கும் சனித்த சாரகுமாரன் என்னும் பாண்டியன் இசை யறி தற்பொருட்டு இந்நூ ல் செய்யப்பட்டதென்று. அடி யார்க்கு நல்லார் சிலப்பதிகார வுரைச் சிறப்புப்பாயிரத்திற் கூறி ர்ை. இந்நூல் அடியார்க்கு நல்லார் காலத்து இறவாது நிலவிய தென்று அவர் உரை நோக்கி உய்த்துணரப்படுவது. இதனே, பாரசவ முனிவரில் யாமளேந்திர்ர் செய்த இந்திரகாளிய மும், அறிவனர் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரத சேனபதியமும், கடைச்சங்க மிரீஇய பாண்டியருட் கவியரங் கேறிய பாண்டியன் மதிவாணனர் செய்த முத நால்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க் கூத்தியன்ற மதி வாணர் காடகத் தமிழ் நூலும் என இவ்வைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத்தறிந்த நால்களன்றேனும் ஒரு புடை யொப் புமைகொண்டு முடித்தலைக் கருதிற்று இவ்வுரையெனக் கொள்க." (சிலப். உரைச்சிறப்புப் பாயிரம்) என்ற தல்ை இஃதுணரலாகும். இசை நுணுக்கமென்று அடி யார்க்கு கல்லார் காட்டும் பாடல்கள் வெண்பா யாப்பாக, உண் மையால் இந்நால் பெரும்பாலும் வெண்பாவாலாயதெனக்கருதப் படும். இந்நூல் காந்தருவமுங் கூத்தும் பற்றி யெழுந்ததாகும். இளங்கோவடிகள் பாடிய கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, குன் றக் கு ர ைவ முதலிய பகுதிகட்கிலக்கணம் இந்நூலிலுள்ள தெனத் தோற்றுகின்றது. இந் நாற்பாடலுள், இடா, பிங்கலே பிராணன், அபானன், உதா னன், சமானன், மலன், கூர்மன், காகன், வியானன் கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன், ஆன்மா, கந்தருவம் முதலிய வடசொற்கள் பயின்றுள்ளன. i.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/234&oldid=731396" இலிருந்து மீள்விக்கப்பட்டது