பக்கம்:Tamil varalaru.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 த மி ழ் வ ர ல | று என்பதனல், தான்,பேன், கோன் என்பன மக்களியற் பெயராக வழங்கிய காலமு முண்டென்று தெரிவது. இவ்வழக்கு இப் போது தமிழ் நூல்களினில்லாமை பலருமறிவர். இனி, சகரக் கிளவியு மவற்றுே ற்றே அஐ ஒள வெனு மூன்றலங் கடையே ' (எழுத்ததி. மொழிமரபு. 63) என்பதனற் சகர வொற்று அ, ஐ, ஒள என்னு மூவுயிரோடுங் கூடி மொழிக்கு முதலில் வழங்கிய சொற்கள் இல்லாத காலத்த வர் தொல்காப்பியனர் என்பது கன்கறியக் கிடப்பது. சகரம் முதலில் உள்ள தமிழ்ச் சொற்கள் பரிபாடல், பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு முதலிய பெரு நூல்களில் வரக்காண்டலாற்ருெல் காப்பியனர் இவற்றுக்கெல்லா முற்பட்டவரென்று துணியலாம். பரிபாடலில், தந்த கள்வன் சமழ்ப்புமுகங் காண்மின் ' (30) என வந்தது. பதிற்றுப்பத்தில், மன்பதை சவட்டுங் கூற்றமென்ப ' (84) என வந்தது. பத்துப் பாட்டில், பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டி ' (பெரும்பாண். 317) என வந்தது காணலாம். சந்து விேப் புண்முடிந் திடுமின் ' (மலைபடு, 393) என வந்தது. இனி, ஒரு சாரார், தொல்காப்பியனர், முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரை கிலே யின்றே ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும் ” (எச்ச. கு. 48) என இலக்கணம் வகுத்தது இலக்கியங் கண்டபின் ஆதலின் இதற் கிலக்கியம் கூத்த ராற்றுப் படையுள் (மலேபடுகடாம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/282&oldid=731449" இலிருந்து மீள்விக்கப்பட்டது