பக்கம்:Tamil varalaru.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 த மி ழ் வ ர ல | ற யாகக் கொள்ளுதலும் சண்டைக்கு கினைக்கத்தகும். கொடி கிலே ' என்ற குத்திரத்துள் வடுவறுசிறப்பின் முதலான மூன் றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணியவருமே ' என்ற தல்ை இவை கடவுள் வாழ்த்தொடு கருதிச்சாரவைத்து வருதலல்லது கடவுட் பெயராகாமை நன்குணரலாகும். கடவுள் வாழ்த்தொடு என் புழி ஒடு கடவுள் வாழ்த்தின் உயர்பு குறித்துவந்ததாதலின் இவை அக்கடவுளோடு ஒத்ததன்மையன ஆகாமை உய்த்துணர லாகும். முதலன மூன்றும் ' என்றது தொல்காப்பியர்ைக்கு முந்து நூலில் இக்கொடிங்கல முதலிய மூன்றும் ஆறனுள் முதற் கண் வைத்திருத்தலேக் குறிப்பது போலும். நச்சினர்க்கினியர் கந்தழி(கந்து-அழி) என்பதற்குப்பற்றுக்கோடு அழிந்ததென்று கருதிக்கொண்டு தத்துவங்கடந்த பொருள் என்று உரை கூறின ராவர். பிறர் வள்ளி என்பதற்கு வெறியாடல் என்றது தம் மனத்திற் கருதிக்கொண்டதைப் புகுவித்ததாகக் கொள்வதன்றி ஆசிரியர் கருத்தெனத் துணி தற்கில்லே. வாடாவள்ளி என்ற விடத்தும் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் ' (புறத். 5) என்றவிடத்தும் வெறியாடல் கூறியொழிக்தமையால் ஈண்டுங் கூறுவது ஆசிரியர் கருத்தன்மையுணரலாம். கந்தழி என்பதற்குச் சோவரணமழித்த மாயோன் விறலாகக்காட்டி உழி ஞையுட் கந்தழியை வைத்து அவ்வாறே கூறியொழிந்தமையாற் பொருந்தாமை காண்க. இரு முறை சோவரணமழித்தலேக் கூறவேண்டிய ஏது இல்லையென்று தெளியலாம். தொல்காப்பிய ஞர் படிமை வழிபாடு உடன்படலால் அப்படிமைகள் உள்ள கோயிலின் முன்றிலில் காட்டப்பெற்ற கொடிக்கம்பத்தையும் அக்கம்பத்தின் தலையில் அவ்வத் தெய்வங்கட்கியைந்த ஊர்தி களைக்கிழியின் எழுதிய கொடியையும் அக்கம்பத்தோடு அக் கொடியைப் பிணிக்குங் கயிருகிய வல்லியையுமே இம்மூன்றும் முறையேகுறிப்பன என்றும், இவற்றை வாழ்த்தலும் அவ்வமரர் கண் முடிவதேயாமென்றும், இங்ங்னம் வாழ்த்தல்கடவுள் வாழ்த் -தொடு கருதிவருமென்றுக் துணிவதே இயைபுடைத்தாகும். கொடிங்லை-கொடிக்கம்பம், பிற்காலத்து ஆராய்ச்சியாளர் கந்தழி என்பது வேள்வி யூபத்துாணிற் சுற்றிய வைக்கோற்புரியென்று கொண்டு இடர்ப் படுவர். பகடு அழிதின் ருங்கு ' என் புழி அழி வைக்கோற்கு வந்தது. i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/300&oldid=731470" இலிருந்து மீள்விக்கப்பட்டது