பக்கம்:Tamil varalaru.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 த மி ழ் வ ல . என வேண்டாதாகும். இக்கருத்தானன்றே கர்ரிக்கண்ணனர் என்பவர் மதுரையைத் 'தமிழ்கெழு கூடல்' (புறம் 58) என்ருர் என்க. தென்றமிழ் நாடுமுழுதும் தமிழ் பொருந்திய ஊர்களே உடையதாகவும் அவற்றைப் பிரித்து வேறே 'தமிழ் கெழு கூடல்' என்றது இங்கே தமிழ் கெழுமுதல் பற்றி என்று எளிதிற் றுணியலாம். 'இமிழ்குரன் முரச மூன்றுட ளுைக் தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே" என அவர் உரைப்பர். இதன் பழையவுரை காரர் ஒலிக்குங் கு லேயுடைய முரசு மூன்றுடனே ஆளும் தமிழ் பொருந்திய மதுரைக்கட் குளிர்ந்த செங்கோல் வேந்து' என உரைத்தார். ஈண்டு மூன்று முரசுடன் ஆளப்படுகின்ற தமிழ் பொருந்திய மதுரை என்றது, மூன்று முரசுடன் முத்தமிழும் ஆளப்படுகின்ற சிறப்புப்பற்றியென்று எளிதில் அறியலாம். மூன்று மூர சுடன் ஆளும் மூன்று தமிழ் பொருந்திய மதுரை என்க. தமிழ் ஆளப் படுதல் என்றது நாடுபோற் குற்றங் களைந்து, கல்லன. கண்டு, தமிழ் போற்றப்படுஞ் சிறப்பானென்று கொள்க. இங்ங்னம் கொள்ளாக்கால், தமிழ்கெழிய தன்மை, மற்றை இருவர் தலை ககர்க்கும் பிறவூர்க்கும் ஒக்குமென்க. 'பொத்தி யாண்ட பெருஞ் சோழனேயும் வித்தை யாண்ட விளம்பழையன் மாறனையும் வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று' (பதிற்று. 90 பதிகம்) என வருவதன் கண் வித்தையாண்டவன் என்று பாண்டியன் கூறப்படுதலேயும் சண்டைக்கேற்ப நோக்கிக் கொள்க. 'ஆளுக் தமிழ் கெழுகூடல்' 'வித்தையாண்ட மாறன்’ இத்தொடர் களின் கருத்தொற்றுமை எளிதில் விளங்கலாம். சோழனப் : 'பொத்தியாண்ட' என்று ஒரு புலவனே ஆண்ட அளவே கூறிப் பாண்டியனே 'வித்தையாண்ட” என்பதன ற் கல்வி முழுதும்

  • பொத்தியார்-கோப்பெருஞ் சோழற்கு உயிர்த்துணையாகிய

பெரும்புலவர் (பு றம்-228) 'பொத்தில் கண்பிற் பொத்தியொடு கெழீஇ'(புறம்-312)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/58&oldid=731568" இலிருந்து மீள்விக்கப்பட்டது